Skip to main content

தோனியை விரட்டி ஓடும் செகால்! வைரல் வீடியோ

Published on 04/02/2019 | Edited on 04/02/2019

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடி முடித்திருக்கிறது. இதில், ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியை 35 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியதோடு, 4 - 1 என்ற கணக்கில் தொடரையும் வென்றிருக்கிறது இந்திய அணி. 
 

Dhoni


 

 

இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் அசத்தலாக விளையாடிய தோனி, உடல்நலக் குறைவின் காரணமாக அடுத்த இரண்டு போட்டிகளில் ஓய்வுபெற்றார். ஆனால், நான்காவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி மோசமாக தோற்றதன் விளைவாக, தோனி மீண்டும் அணியில் இடம்பெற வேண்டும் என கோரிக்கைகள் வைக்கப்பட்டன. அதேபோல், கடைசி போட்டியில் தோனி களமிறங்குவார் என அணி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. 
 

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை நடந்த போட்டி முடிந்ததும், இந்திய அணிக்கான கோப்பைகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது. ஒவ்வொரு போட்டியின் முடிவிலும் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யஸ்வேந்திர செகால், வீரர்களிடம் செகால் ஸ்பீக்ஸ் என்ற நிகழ்ச்சிக்காக பேட்டி காணுவது வழக்கம். அதேபோல், மற்ற வீரர்களிடம் கேள்விகளைக் கேட்டுவிட்டு, தோனியிடம் திரும்பியிருக்கிறார். ஆனால், தோனியோ சின்னக் குழந்தை போல் கைகளை ஆட்டிக்கொண்டு அங்கிருந்து ஓடத் தொடங்குகிறார். அவரை விடாமல் துரத்தும் செகாலிடம் இருந்து எஸ்கேப் ஆவதற்காக, மைதானத் தடுப்புகளைத் தாண்டி வெளியே குதித்து ஓடுகிறார். இந்தக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.