Skip to main content

இந்தியாவிற்கு உதவி அறிவித்த கூகுள், மைக்ரோசாஃப்ட்!

Published on 26/04/2021 | Edited on 26/04/2021

 

google microsoft

 

இந்தியாவில் தொடர்ந்து கரோனா பாதிப்பு மோசமடைந்து வருகிறது. கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரித்துக்கொண்டே சென்றால், தற்போதுள்ள உள்கட்டமைப்புகளால் அதனை தாங்க முடியாது என மத்திய அரசு மாநில அரசுகளிடம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் மற்றும் படுக்கை உள்ளிட்டவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், உலக நாடுகள் இந்தியாவிற்கு ஆக்சிஜன், வென்டிலேட்டர்கள் வழங்கவும், மற்ற உதவிகளை செய்யவும் முன்வந்துள்ளன.

 

இந்தநிலையில்ஈ இந்தியாவிற்கு கூகுள் நிறுவனமும், மைக்ரோசாஃப்ட் நிறுவனமும் உதவிகளை அறிவித்துள்ளன. இதுகுறித்து கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, "இந்தியாவில் கரோனா நெருக்கடி மோசமடைந்து வருவதைப் பார்க்க மிகவும் வருத்தமளிக்கிறது. கூகுளும், கூகுள் பணியாளர்களும் மருத்துவப் பொருட்கள் விநியோகம், பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ள சமூகங்களுக்கு ஆதரவளிக்கும் அமைப்புகள் ஆகியவற்றுக்காக ‘கிவ் இந்தியா’ (நிதியுதவி அளிப்பதற்கான இணையதளம்), ‘யூனிசெப்’ உள்ளிட்டவற்றுக்கு 135 கோடி ரூபாய் வழங்கும். மேலும் முக்கிய தகவல்களைப் பரப்புவதற்கு மானியமும் வழங்கப்படும்" என தெரிவித்துள்ளார்.

 

ad

 

அதேபோல் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி, "இந்தியாவில் தற்போது உள்ள சூழ்நிலையால் மனம் உடைந்துள்ளேன். இந்தியாவிற்கு உதவ முன்வந்ததற்காக அமெரிக்க அரசுக்கு நன்றியுள்ளவனாக இருப்பேன். மைக்ரோசாஃப்ட் தொடர்ந்து தனது குரல், வளங்கள் மற்றும் தொழில்நுட்பத்தை நிவாரண பணிகளில் உதவுவதற்கும், ஆக்சிஜன் செறிவுபடுத்தும் சாதனங்களை வாங்குவதற்கும் பயன்படுத்தும்” என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்