கடந்த வெள்ளிக்கிழமை அன்று இதுவரை சந்திக்காத ஒரு தொலைபேசி அழைப்பினை ஜெர்மன் காவல்துறை சந்தித்துள்ளது. "என்னை ஒரு அணில் குட்டி துரத்துகிறது" என்பதுதான் அந்த தொலைபேசியில் வந்த இளைஞனின் குரல் தெரிவித்தது. முதலில் ஜெர்மன் காவலர்கள் எதோ விளையாட்டாக நம்மை அணுகி கிண்டல் செய்கிறார்கள் என்று எண்ணியிருக்கிறார்கள். பின்னர், தொலைபேசி அழைப்பு வந்த பகுதியின் சிசிடிவியின் வீடியோ பதிவுகளை பார்த்ததும்தான் அது உண்மையான தகவல் என்று தெரிந்துகொண்டு அந்த இடத்திற்கு விரைந்துள்ளது ஜெர்மன் காவல்துறை.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், கோபத்துடன் துரத்திக்கொண்டிருந்த குட்டி அணிலை பிடித்து தொலைபேசியில் அழைத்த இளைஞனை காப்பாற்றினர். பிறகு அந்த குட்டி அணிலுக்கு மயக்க மறந்துக் கொடுக்கப்பட்டு பாதுகாத்தனர். இறுதியில், அதை காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டனர். இச்சம்பவம் குறித்து, "தாயை பிரிந்து புது இடம் தேடி தவிக்கும் அணில்கள் இவ்வாறுதான் கோபமாக நடந்துகொள்ளும்" என்று தெரிவித்துள்ளனர்.