Skip to main content

நடுகடலில் இருநாட்டு மீனவர்களுக்குள் சண்டை...பெட்ரோல் வெடிகுண்டு வீசியும் தாக்குதல்...(வீடியோ)

Published on 29/08/2018 | Edited on 29/08/2018
fishermen

 

இங்கிலாந்து மீனவர்களுக்கும் பிரான்ஸ் மீனவர்களுக்கும் இடையே கடலில் எல்லை பிரச்சனை, அதனால் இந்த இரு குழுக்களும் நடுகடலிலேயே பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசி தாக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 

நார்மண்டி இங்கிலீஷ் கால்வாயில் மீன்பிடிப்பது தொடர்பாக பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து மீனவர்களுக்கு இடையே கடும் பிரச்சனை நிலவி வந்தது, தற்போது அது கும்பல் சண்டையாக மாறியுள்ளது. பிரான்ஸின் நார்மண்டி பகுதியில் இங்கிலாந்தைச் சேர்ந்த மீன்பிடிப் படகுகள் மீன்பிடிப்பதற்கு பிரான்ஸ் மீனவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். 
 

ஆனால் வழக்கம் போல் குறிப்பிட்ட பகுதியில் இங்கிலாந்து படகுகள் மீன்பிடிக்க வந்ததால் ஆத்திரமடைந்த பிரான்ஸ் மீனவர்கள் கற்களைக் கொண்டு வீசியும், பெட்ரால் வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இதனை தொடர்ந்து தங்களின் படகுகளை இங்கிலாந்து மீனவர்களின் படகுகளின் மீது மோதி தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்தனர். இந்த சம்பவத்தில் சுமார் 40 பிரான்ஸ் படகுகள் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்