சீனாவில் வுஹான் மாகாணம் முழுவதும் கரோனா வைரஸ் பிடியில் சிக்கி பெரும் அழிவை சந்தித்து வருகின்றது. மனிதர்கள் மூலம் பரவும் கொரோனா ஆட்கொல்லி வைரஸானது சீனாவை தொடர்ந்து தென் கொரியா, தாய்லாந்து மற்றும் அமெரிக்காவிலும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தோற்று காரணமாக உலகம் முழுவதும் மக்களிடையே அச்சம் எழுந்துள்ளது. நோய் பரவுவதை தடுக்க சில நாடுகள் சீனாவுக்கான விமான போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.
இந்நிலையில், சீனாவின் அண்டை நாடான ஹாங்காங் தற்போது கொரோனா வைரஸ் பிடியில் சிக்கி உள்ளது. இதுவரை அந்நாட்டில் 16 பேர் இந்த வைரஸ் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக சீனா உடனான தொடர்பை தற்காலிகமாக துண்டித்துக்கொள்வதாக ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது. மேலும் சீனாவுக்கு செல்லும் எல்லை பகுதியையும் அந்நாட்டு அரசு மூடியுள்ளது.