Skip to main content

அரை நிர்வாணத்துடன் விருது வாங்கியது ஏன்? பிரபல பாடிகியின் போராட்டம்

Published on 18/11/2019 | Edited on 18/11/2019

இந்த வருடத்திற்கான கிராமி விருது லாஸ்வேகாஸில் நடைபெற்றது. இந்த விருது விழா அமெரிக்காவிலுள்ள இசைத்துறையில் சாதனை படைத்தவர்களை கௌரவப்படுத்தும் விதமாக கொடுக்கப்படுவது.
 

mont

 

 

இந்த வருடத்தில் சிறந்த மாற்று இசை ஆல்பத்திற்கான விருது சிலி நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகி மோன் லாஃபர்தேவுக்கு அறிவிக்கப்பட்டது. விழாவில் அவரது பெயர் அழைக்கப்பட்டதும், சிவப்பு  கம்பளத்தின் மீது கருப்பு நிற உடையில் அவர் நடந்து வந்தார்.

லாபர்டே மேலாடை எதுவும் அணியாமல், அரை நிர்வாணமாக விருது பெற சென்றதால் அங்கிருந்த அனைவரும் அவரையே பார்த்துக்கொண்டிருந்தனர். அவர் தனது மார்பு பகுதியில் சிலி மொழியில்,   ‘அவர்கள் என்னை சித்திரவதை செய்கின்றனர். பலாத்காரம் செய்து கொன்று விடுகின்றனர்’ என்று எழுதி இருந்தார். தென் அமெரிக்க நாடான சிலியில்,  அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. 

அங்கு நடக்கும் போராட்டத்தை ஒடுக்க சிலி அரசு மிகவும் மோசமாக நடந்துகொள்கிறது. போலீசார் தடியடி, துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 20 பேர் கொல்லப்பட்டனர். ரப்பர் குண்டுகளை கொண்டு நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 200க்கும் மேற்பட்டோர் பார்வை இழந்தனர். இதனை கண்டிக்கும் வகையில், மேலாடை இன்றி அரை நிர்வாணமாக விருதை  பெற்றதாகவும் இதனை சிலி மக்களுக்கு சமர்ப்பிப்பதாகவும் லாபர்டே விழாவில் கூறியுள்ளார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“இந்த சாதனை உங்களின் கடின உழைப்பிற்கான சான்று” - பிரதமர் வாழ்த்து

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
pm modi congratulates shankar mahadevan team wins grammy award

உலகளவில் இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக நடைபெற்று வரும் 'கிராமி விருது', இசையுலகில் உயரிய விருதாகக் கருதப்படுகிறது. ஆண்டுதோறும் நடைபெற்று வரும் இந்த விருது விழா, இந்த ஆண்டும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துள்ளது. இந்த 66வது கிராமிய விருது விழாவில், சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடல் ஆல்பம் உள்ளிட்ட பல பிரிவுகளில் பல்வேறு கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உலகின் சிறந்த ஆல்பம் (Best Global Music Album) பிரிவில் இந்தியாவின் சக்தி இசைக்குழு வென்றுள்ளது. அக்குழுவின் ‘திஸ் மொமெண்ட்’ ஆல்பத்திற்கு இந்த விருது கிடைத்துள்ள நிலையில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ், விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழு இதில் பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் தற்போது வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த அகையில் ஏ.ஆர் ரஹ்மான், அந்த இசைக்குழுவிற்கு எக்ஸ் தளத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் பிரதமர் மோடி சக்தி இசைக்குழுவிற்கு பாராட்டு கூறியுள்ளார். அவரது எக்ஸ் பக்கத்தின் மூலம் வாழ்த்து தெரிவித்த அவர், “இசையின் மீதான உங்களின் சிறப்பான திறமையும் அர்ப்பணிப்பும் உலக அளவில் அன்பை பெற்றுள்ளது. இந்தியா பெருமை கொள்கிறது. இந்த சாதனைகள் நீங்கள் உழைக்கும் கடின உழைப்புக்கு ஒரு சான்றாகும். இது புதிய தலைமுறை கலைஞர்களை பெரிய கனவு காணவும் இசையில் சிறந்து விளங்கவும் தூண்டும்” என குறிப்பிட்டுள்ளார். 

Next Story

கிராமி விருது வென்ற சங்கர் மகாதேவன் ஆல்பம்

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
Shankar Mahadevan shakthi This Moment album wins grammy award 2024

உலகளவில் இசைக் கலைஞர்களை அங்கீகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் நடைபெற்று வரும் 'கிராமி விருது' இந்த ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்துள்ளது. இந்த 66வது சிறந்த இசையமைப்பாளர், சிறந்த பாடல் ஆல்பம் உள்ளிட்ட பல பிரிவுகளில் பல்வேறு கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் உலகின் சிறந்த ஆல்பம் (Best Global Music Album) பிரிவில் இந்தியாவின் சக்தி இசைக்குழு வென்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அக்குழுவின் ‘திஸ் மொமெண்ட்’ ஆல்பத்திற்கு இந்த விருது கிடைத்துள்ள நிலையில் சங்கர் மகாதேவன், செல்வகணேஷ் விநாயக்ராம், கணேஷ் ராஜகோபாலன், ஜாகீர் உசேன் ஆகியோர் அடங்கிய இசைக்குழு இதில் பணியாற்றியுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் தற்போது வாழ்த்து கூறி வருகின்றனர். 

கடந்த வருடம் இந்தியாவின் பெங்களூரைச் சேர்ந்த ரிக்கி கேஜ், 'டிவைன் டைட்ஸ்' ஆல்பத்துக்காக சிறந்த ஆடியோ ஆல்பம் (Best Immersive Audio Album) என்ற பிரிவில் கிராமி விருது வென்றார் என்பது நினைவுகூரத்தக்கது.