Skip to main content

சுதந்திர காஷ்மீருக்கு செல்லாதீர்கள்; 13 ஆம் தேதியே எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா...

Published on 15/02/2019 | Edited on 15/02/2019

 

gfdfgf

 

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் சென்ற வாகனத்தின் மீது ஜெய்ஷ் இ முகம்மது இயக்க தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 44 வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இன்னும் பல வீரர்கள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 13 ஆம் தேதி அமெரிக்கா தனது நாடு மக்களுக்கு வெளியிட்ட பயண எச்சரிக்கை குறிப்பில் சுதந்திர காஷ்மீர் பகுதிக்கு செல்லாதீர்கள், அங்கு ஆயுத சண்டைக்கான வாய்ப்பிருக்கிறது என அறிவுறுத்தியுள்ளது. வழக்கமாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்றே அமெரிக்கா தனது அறிவிப்புகளில் பாகிஸ்தானை குறிப்பிடும். ஆனால் இந்தியா அமெரிக்கா இடையே நிலவி வரும் வர்த்தக போர் காரணமாக தற்போது காஷ்மீரை சுதந்திர காஷ்மீர் என குறிப்பிட்டுள்ளதாக தெரிகிறது. ஈரான், வெனிசுலா ஆகிய நாடுகளில் இருந்து இந்திய ரூபாயில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டதால் அமெரிக்கா உடனான உறவில் தற்போது விரிசல் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் தாக்குதலுக்கு முந்தைய நாளே அமெரிக்கா தனது நாட்டு பயணிகளை எச்சரித்திருக்கும் நிகழ்வு, அமெரிக்காவிற்கு ஏற்கனவே அந்த பகுதியில் உள்ள பாதுகாப்பின்மை அல்லது தாக்குதல் குறித்த விபரங்கள் ஏதேனும் தெரியுமா என்ற சந்தேகத்தையும் எழுப்புவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறிவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்