Skip to main content

ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள், ரசிகர்கள் ஓட்டு யாருக்கு? கவர துடிக்கும் வேட்பாளர்கள்...

Published on 18/03/2021 | Edited on 18/03/2021

 

To whom did Rajini People's Forum executives and fans vote

 

2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் களத்தைச் சந்திப்போம் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார். 2020ஆம் ஆண்டு இறுதியில் அரசியல் கட்சி தொடங்கவுள்ளேன் என அறிவித்தார். சில வாரங்களில் கொரோனாவைக் காரணம் காட்டி நான் அரசியலில் ஈடுபடவில்லை, ரஜினி மக்கள் மன்றமும் இனி அரசியல் நடவடிக்கையில் ஈடுபடாது, எப்போதும் சேவை மன்றமாகவே தொடரும் எனச் சொல்லி முற்றுப்புள்ளி வைத்தார்.

 

தமிழகம் தாண்டி ரஜினியின் திரைப்படத்தை, அவரின் ஸ்டைலை ரசிக்கும் ரசிகர்கள் கோடிக்கணக்கில் உள்ளனர். அதேநேரத்தில் தமிழகத்தில் ரஜினி மக்கள் மன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் என சுமார் 40 லட்சம் பேர் இருப்பதாக ரஜினி மக்கள் மன்றத்தினர் கூறுகின்றனர். இவர்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் வேறு கட்சிக்குப் போனாலும், 80 சதவீதத்துக்கும் மேலானவர்கள் ரஜினி மன்றத்திலேயே உள்ளனர் என்கிறார்கள். இந்த வாக்குகள் யாருக்கு என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு தேர்தலிலும் ரஜினி மறைமுகமாக தனது வாக்கு யாருக்கு என்பதை தேர்தலுக்கு முன்பே சூசகமாக மறைமுகமாக அறிவிப்பார் அல்லது வாக்களித்துவிட்டு வரும்போது நேரடியாக சைகை மூலமாக காட்டியதும் உண்டு. 

 

இந்நிலையில் நடைபெறவுள்ள இந்த தேர்தலில் தலைவர் யாருக்கு ஆதரவு தரப்போகிறார் என்கிற கேள்வி ரஜினி மக்கள் மன்றத்தினரிடையே எழுந்துள்ளது. அரசியல் இனி இல்லை என அவர் அறிவித்தாலும், மன்றத்தினர் விடுவதாக இல்லை. அதற்கு காரணம், அரசியல் கட்சி வேட்பாளர்களின் நெருக்கடி. ரஜினி ரசிகர் மன்றத்தின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் லட்சத்துக்கு மேற்பட்ட நிர்வாகிகள், ரசிகர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். குறிப்பாக சோளிங்கர், வேலூர், குடியாத்தம், கே.வி.குப்பம், வாணியம்பாடி, திருப்பத்தூர் தொகுதிகளில் கணிசமாக உள்ளனர். சோளிங்கர் தொகுதியில் 300 பூத்களுக்குத் தலா 30 பேர் என சுமார் 9 ஆயிரம் பூத் கமிட்டியினர் ரஜினி மக்கள் மன்றத்தினர் உள்ளனர். 

 

ரஜினி அரசியலுக்கு வரவில்லை என்று சொன்ன பின்பும், இந்த அமைப்பு கலையாமல் அப்படியே உள்ளது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள மற்ற 12 தொகுதிகளிலும் உள்ளன. இதனை அறிந்துள்ள பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, பாமக, அமமுக போன்ற கட்சிகளும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்திக்க தொடங்கியுள்ளனர்.

 

சோளிங்கர் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் முனிரத்தினம், அமமுக வேட்பாளர் பார்த்திபன் போன்றோர் ஒருங்கிணைந்த வேலூர் ரஜினி மக்கள் மன்ற மா.செ சோளிங்கர் ரவியை சந்தித்து, சால்வை அணிவித்து, ஆதரவு கேட்டுள்ளனர். இதேபோல் மற்ற தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களும் ஆதரவு கேட்டு ரவி மற்றும் அந்தந்த பகுதி நிர்வாகிகளை அணுகியுள்ளனர். “தலைவர் சொல்லாம நாங்க எந்த முடிவும் எடுக்க முடியாதே” என சமாளித்து அனுப்பியுள்ளார்கள். இப்படி வேலூர் மாவட்டம் மட்டும்மில்லாமல் திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சை என பல மாவட்டங்களிலும் ரஜினி மக்கள் மன்ற மா.செக்களை அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் சந்தித்து, ஆதரவு கேட்டு வருகின்றனர் என்கிறார்கள் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மாட்டு வண்டியில் சென்று வாக்களித்த இளைஞர்கள்!

Published on 30/12/2019 | Edited on 30/12/2019

புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடந்தது. இதில் கீரமங்கலம் அருகில் உள்ள கொத்தமங்கலம் ஊராட்சியில் வாக்குச்சாவடி மையத்திற்கு இளைஞர்கள் மாட்டு வண்டியில் வந்து வாக்களித்தனர். மேலும் மரக்கன்றுகளுடன் வந்த இளைஞர்கள் வாக்களித்துவிட்டு மரக்கன்றுகளை நட்டுச் சென்றனர். பனை மரக்காதலர்கள் என்ற அமைப்பினர் வாக்களித்த பிறகு பனை விதைகளை விதைத்தனர்.

Youths who voted in the cart using pudukkottai district


 

வடகாடு பரமநகர் வாக்குச்சாவடியில் தந்தையுடன் சென்ற ஹரிதாரணி என்ற 3 வயது சிறுமி தந்தைக்கு மை வைப்பதைப் பார்த்துவிட்டு தனக்கும் மை வைக்க வேண்டும் என்று அடம்பிடித்து விரலில் மை வைத்துக் கொண்டு வந்து தானும் ஓட்டுப் போட்டுவிட்டு வந்ததாக காட்டி மகிழ்ந்தார். 

 

Next Story

அரசியல் மாற்றத்திற்கு துணை நின்று... ரசிகர்களுக்கு ரஜினி வேண்டுகோள்...

Published on 27/04/2019 | Edited on 27/04/2019
rajini


ரசிகர்களின் எதிர்பார்பப் புரிகிறது. எப்போது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயார் என்று ரஜினிகாந்த் கூறியிருந்தார். தற்போது மே 23க்கு பிறகு தமிழக அரசியல் நிலவரம் எப்படி இருக்கும் என்று ஆலோசனை செய்த ரஜினி, கட்சி நிர்வாகிகளுக்கு வாய்மொழி உத்தரவு ஒன்றை போட்டுள்ளார். எப்போது சட்டமன்றத் தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அரசியல் கட்டமைப்பு பணிகளை தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

 

RMMVellore




அந்த அடிப்படையில் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் சோளிங்கர் இரவி அம்மாவட்ட நிர்வாகிகளுக்கு வெளியிட்டுள்ள அறிக்கை வெளியாகி உள்ளது. அதில், ''சட்டமன்ற தேர்தல் எப்பொழுது வந்தாலும் சந்திக்க தயார் என்ற தலைவரின் அறிவிப்பிற்கு ஏற்றவாறு இதுவரை நம் மாவட்டம் முழுவதிலும் தீவிரமாய் செயல்பட்டு வந்த அரசியல் கட்டமைப்பு பணிகளை தொடர்ந்து செய்து விடுபட்ட வேலைகளை முழுமையாய் செய்து முடித்து தலைவர் சந்திக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கும், அவர் நிகழ்த்த போகும் அரசியல் மாற்றத்திற்கும் துணை நின்று தலைவரின் வெற்றியை உறுதியாக்குவோம்'' என்று கூறியுள்ளார். 
 

இதேபோல் ஒவ்வொரு மாவட்ட செயலாளர்களும் நிர்வாகிகளுக்கு இதுபோன்ற அறிவுறுத்தியுள்ளனர்.