Skip to main content

தேனிக்கு பயணமாகும் 20 வாக்குபதிவு இயந்திரங்கள்... காரணம் என்ன?

Published on 15/05/2019 | Edited on 15/05/2019

திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து 20 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 30 விவிபேட் இயந்திரங்களும் தேனிக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

 

தேனில் இரண்டு வாக்குசாவடிகள் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடக்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில் 20 வாக்குப்பதிவு இயந்திரங்களும், 30 விவிபேட் இயந்திரங்களும் கொண்டு செல்லப்படுகின்றன.

 

 

election

 

ஏற்கனவே அங்கு 50 பெட்டிகள் இருக்கின்ற நிலையில் 20 வாக்கு பெட்டிகள் தேனிக்கு கொண்டு செல்லப்படுவது எதற்கு என எதிர்க்கட்சிகள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

தேனியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர், ஈவிகேஎஸ் இளங்கோவன் மற்றும் அமமுக தேனி வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வன் ஆகியோர் இதில் சதி இருப்பதாகவும், ஓபிஎஸ் மகனை வெற்றிபெற வைக்கத்தான் இந்த சதி  எனவும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். 

 

மேலும் இதற்கான காரணம் என்ன விளக்கம் என்று ஆணையத்திடம் கேட்க போவதாகவும் தெரிவித்துள்ளனர்.    

 

 

 

 

சார்ந்த செய்திகள்