Skip to main content

திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு நடந்து சென்றவர் பலி!

Published on 14/09/2018 | Edited on 14/09/2018

 

thiruppathi

 

உலகின் பணக்கார கடவுளாக வர்ணிக்கப்படும் திருப்பதி - திருமலை வெங்கடேசபெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவம் கடந்த செப்டம்பர் 12ந்தேதி துவங்கியுள்ளது. வரும் 21ந்தேதி வரை நடைபெறும் பிரம்மோற்சவம் விழாவுக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் தினமும் வீதியுலா வரும் பெருமாளை தரிசனம் செய்ய செல்வார்கள். இதற்காக தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பெருமாள் பக்தர்கள் நடந்தே திருமலைக்கு சென்றுக்கொண்டுள்ளனர்.

 

திருவண்ணாமலையை சேர்ந்த காசி என்பவர் பெருமாளை தரிசனம் செய்ய நடந்து சென்றுள்ளார். ஆந்திரா மாநிலம் சித்தூரை அடுத்த குடிப்பாலா மண்டலத்தில் உள்ள பன்னாட்டு கிராமம் அருகே நடந்து சென்றுக்கொண்டு இருந்துள்ளார். அவருடன் 10க்கும் மேற்பட்டோர் முன்னும் பின்னுமாக சாலையின் ஓரம் நடந்து சென்றுக்கொண்டு இருந்துள்ளார்.

 

இன்று மதியம் 2 மணியளவில், வேலூரிலிருந்து சித்தூர் நோக்கி சென்ற தமிழ்நாடு அரசுப்பேருந்து எதிரே வந்த வாகனத்துக்கு வழி விடுகிறேன் என்கிற பெயரில் சாலையோரம் பாதயாத்திரை சென்றுக்கொண்டுயிருந்த காசி மீது மோதியது. இதில் சம்பவயிடத்திலேயே காசி இறந்துள்ளார். மற்றொருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டடது. அடிப்பட்டவரை உடனடியாக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளனர். 

 

இந்த தகவல் குடிப்பாலா காவல்நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து அங்கிருந்து வந்த போலிஸார் இறந்த காசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சித்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விபத்து எப்படி ஏற்பட்டது என விசாரணை நடத்திவரும் போலிஸார் விபத்து ஏற்படுத்திய பேருந்தை காவல்நிலையத்தில் நிறுத்திவைத்துள்ளனர்.
 

சார்ந்த செய்திகள்