Skip to main content

26 இடங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்க முயற்சி; இந்தியா முறியடிப்பு!

Published on 09/05/2025 | Edited on 09/05/2025

 

 India foils attempt Pakistan attempts to target 26 locations

பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை நடத்தப்பட்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலைத் தொடர்ந்து, இந்திய ராணுவம் மற்றும் பாகிஸ்தான் ராணுவம் இடையே தாக்குதல் சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில், எல்லைகளை மீறி இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் நடத்தும் அனைத்து முயற்சிகளையும், இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. இருப்பினும், பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில், பெண்கள், குழந்தைகள் என 16 உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நேற்றிரவு பாகிஸ்தான், 300 இருந்து 400 ட்ரோன்கள் அனுப்பி தாக்குதல் நடத்த முயன்றதாகவும், அதில் சில ட்ரோன்கள் துருக்கியில் இருந்து வாங்கப்பட்டவை எனவும், அதனை இந்திய ராணுவம் அழித்து முறியடித்ததாகவும், லெப்டினன்ட் கர்னம்ல் சோஃபியா குரேஷி இன்று (09-05-25) தகவல் தெரிவித்திருந்தார். இரு நாடுகளுக்கும் இடையே பதில் தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறி வருவதால் எல்லைப் பகுதிகளில் பதற்றம் நீடித்து வருகிறது. அதனால், பாகிஸ்தான் ஒட்டிய எல்லை மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கிருக்கும் மக்களை வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்து இந்திய ராணுவம் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இரு நாடுகளுக்கும் இடையே நடந்த வரும் தாக்குதலால், போர் நிலவும் சூழல் உருவாகியுள்ள சூழ்நிலையில், இந்தியாவின் 7 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் தாக்குதல் முயற்சி நடத்தியுள்ளது. ஏற்கெனவே, ஜம்மு-காஷ்மீரின் ஹண்ட்வாரா மாவட்டத்தில் உள்ள நவ்காம் பகுதியில் பாகிஸ்தான் போர் நிறுத்த மீறி தாக்குதலை நடத்தி வந்தது. இரவு 7 மணி முதல் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தி வந்த நிலையில், காஷ்மீரின் சம்பா, பெரோஷ்பூர், ராஜஸ்தானின் பொக்ரான், குஜராத் உள்ளிட்ட 26 இடங்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல் முயற்சித்தது. அதனை இடைமறித்து இந்திய வான் பாதுகாப்பு தடுப்பு அமைப்பு அழித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்