Skip to main content

எதிர்கட்சியினரை மூக்குடைக்கும் திமுக எம்.எல்.ஏ. –இளைஞர்களை கவரும் ஊராட்சி கூட்டம்

Published on 20/01/2019 | Edited on 20/01/2019
k


வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தொகுதி எம்.எல்.ஏவும், திமுக மத்திய மா.செவுமான நந்தகுமார், 9ந்தேதி ஊராட்சி கூட்டத்தை தொடங்கினார். தினசரி 3 ஊராட்சிகள் மட்டும்மே என கணக்கு வைத்துக்கொண்டு கூட்டம் நடத்துகிறார். கழனிப்பாக்கம், கந்தனேரி உட்பட இதுவரை 6 ஊராட்சியில் ஊராட்சி சபா கூட்டத்தை நடத்தியுள்ளார்.


பொங்கல் விழாவை முன்னிட்டு கூட்டம் ஏற்பாடு செய்து மக்களுக்கு நெருக்கடி தரக்கூடாதென தயங்கி ஊராட்சி சபா கூட்டம் நடத்துவதை நிறுத்திவைத்தார். பொங்கல் முடிந்ததும் மீண்டும் ஊராட்சி சபா கூட்டம் தொடங்கியுள்ளார்.


ஊராட்சி சபா கூட்டத்தில் பெண்களுக்கு முக்கியத்துவம் தந்து முதலில் அவர்களிடம் மைக் தந்து குறைகளை கேட்பவர், அடுத்து இளைஞர்கள், இறுதியில் ஆண்கள் என அந்த கிராமத்தில் உள்ள குறைகளை கேட்கிறார். கழனிப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த வாலிபால் டீம் இளைஞர்கள் விளையாட்டு பொருள் தேவை என கோரிக்கை வைத்தனர் எம்.எல்.ஏவிடம். கந்தனேரி கபடி டீம் இளைஞர்களும் அதே கோரிக்கையை வைத்தனர். இவர்கள் கேட்பதை பார்த்து எட்டவாது, பத்தாவது, 11வது படிக்கும் பொடிசுகளும் ஒரு பட்டியல் தந்து அண்ணனுங்க எங்களை விளையாட்டுல சேர்ந்துக்கமாட்டேன்கிறாங்க. அதனால் அவுங்களுக்கு வாங்கி தர்றமாதிரி எங்களுக்கும் வாங்கி தாங்க சார் என கோரிக்கை வைத்தனர்.


அந்த கோரிக்கைகளுக்கு உடனே செவிசாய்த்த எம்.எல்.ஏ நந்தகுமார், உடனடியாக கிரிக்கெட் மட்டை, பந்து, நெட், பேட், வாலிபால், டென்னிஸ் பேட் என 5 செட் வாங்கி அந்த கிராமங்களுக்கு நேரடியாக சென்று வழங்கியுள்ளார். இதனைப்பார்த்து அந்த கிராம பெண்கள் சந்தோஷமாகி, மற்ற கோரிக்கைகளையும் நிறைவேற்றி வைங்க தலைவரே என கோரிக்கை வைத்தனர். நிச்சயம்மாக, வீட்டுமனை பட்டா, விதவை உதவித்தொவை, முதியோர் உதவித்தொகை வாங்கி தர நிச்சயம் முயற்சி செய்கிறேன் என வாக்குறுதி தந்துவிட்டு வந்தார்.

இதுப்பற்றி நம்மிடம் பேசிய எம்.எல்.ஏ நந்தகுமார், ஊராட்சி சபா கூட்டத்திற்கு பெரும்பாலும் வாயதானவர்கள் அதிகளவில் வந்து முதியோர் உதவித்தொகை விண்ணப்பித்தேன் தரமறுக்கிறார்கள், வந்துக்கொண்டுயிருந்த உதவித்தொகை வரவில்லை என்பதே 50 சதவித புகார்களாக உள்ளது. அதற்கடுத்து வீட்டுமனைப்பட்டா வேண்டும் என்பதும், சாலை வசதி வேண்டும் என்பதாகும்.

ஒவ்வொரு ஊராட்சியிலும் மக்கள் தரும் கோரிக்கை மனுக்களை பைல் செய்து வகை பிரிக்கிறோம். கோரிக்கைகளில் என்னால் தனிப்பட்ட முறையில் செய்ய முடிந்த பொருட்கள் வாங்கி தருவது, கோயில் கட்டிதருவது, சீரமைப்பது, விளையாட்டு மைதானங்கள் பராமரிப்பு, தண்ணீர் டேங்க் அமைத்தல் போன்றவற்றை செய்கிறேன், அரசாங்கத்தால் தான் செய்ய முடியும் என்பதை தனியாக எடுத்து வைத்துள்ளேன். மக்கள் சந்திப்பு முடிந்தபின் மக்களோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப்போகிறேன் என்றார் அதிரடியாக.


அரசாங்கம் நடத்த சொல்ற, அதிகாரிகள் வந்து கலந்துக்கற கிராம சபா கூட்டத்தில் பொதுமக்களால் வைக்கப்படும் கோரிக்கைக்கே எந்த நடவடிக்கையும் இல்லை. இதில், எதிர்கட்சியான திமுக நடத்தற கிராமசபா கூட்டத்தால் விடிவு வந்துடுமா என ஆளும்கட்சியான அதிமுக, பாஜக உட்பட சில கட்சியினர் திமுகவினரை பார்த்து நக்கலடிக்கின்றனர். அவர்களுக்கு பதிலடி தரும் விதத்தில் திமுக எம்.எல்.ஏ கிராமசபா கூட்டத்தில் மக்களின் தேவைகளை நிறைவேற்றி பகடி பேசுவர்களுக்கு பதிலடியை தந்துவருகின்றனர்.

சார்ந்த செய்திகள்