Skip to main content

திருவண்ணாமலை தீபத்திருவிழா- கட்டுப்பாடுகளை நீக்க வலியுறுத்தி பா.ஜ.க.வினர் ஆர்ப்பாட்டம்!

Published on 29/11/2020 | Edited on 29/11/2020

 

tiruvannamalai karthigai deepam festival bjp party leaders


திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழா இன்று (29/11/2020) காலை 04.30 மணியளவில் அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து மாலை 06.00 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.

 

இந்த ஆண்டு கரோனா தடை உத்தரவு அமலில் இருப்பதால் தீபத் திருவிழாவில் பக்தர்கள் மலையேறுதல், கிரிவலம் வருதல் போன்றவற்றை மாவட்ட நிர்வாகம் தடை செய்துள்ளது. மேலும் வெளி மாவட்ட, வெளி மாநில பக்தர்கள் நகருக்குள் வராதபடி மாவட்ட காவல்துறையினர் தலைமையில் மூன்று அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

 

இந்நிலையில் இன்று காலை முதல் திருவண்ணாமலை நகர பொதுமக்கள் பக்தர்கள் மாட வீதியை கிரிவலம் வந்து கொண்டிருந்தனர். குறைந்த அளவு பக்தர்கள் வருகை தந்த போது போலீசார் ஒவ்வொருவராக அனுப்பி வைத்தனர். பின்பு அதிகமான கூட்டங்கள் வர தொடங்கியதால் தடுத்து நிறுத்தினர்.

tiruvannamalai karthigai deepam festival bjp party leaders

இதனை அறிந்த பா.ஜ.க.வின் திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமையில் பா.ஜ.க.வினர். இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள்,  கோயில் மாட வீதியில் காந்தி சிலை முன்பு திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளும் கட்சியான அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும், காவல்துறைக்கு எதிராகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 

திறந்து திறந்து விடு பக்தர்களுக்காக மாட வீதியை திறந்து விடு என கோஷங்கள் எழுப்பினர். முக்கிய பிரமுகர்களுக்கு கோயிலுக்குள் அனுமதி வழங்கும் காவல்துறையினர், பொதுமக்களை மாட வீதியில் கூட அனுமதிக்காதது ஏன்? என கோஷமிட்டனர். 

tiruvannamalai karthigai deepam festival bjp party leaders

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த டி.எஸ்.பி கோட்டீஸ்வரன் உயர் அதிகாரிகளுக்கு தகவல் கூறியதைத் தொடர்ந்து காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். 

 

திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி அரவிந்த், பா.ஜ.க. மாவட்ட தலைவரிடம் 'அதிகளவு பக்தர்கள் வரும் பொழுது மட்டுமே தடுத்து நிறுத்துகிறோம். குறைவான பக்தர்கள் வரும் போது அவர்களை மாட வீதியை வலம் வர அனுப்பிக் கொண்டிருக்கிறோம்' என்றார். அதனை ஏற்றுக்கொள்ளாத பா.ஜ.க., இந்து அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள், மாடவீதி சாலையை தடுப்பு போட்டு தடுக்காமல் முழுவதும் திறந்து விட வேண்டும், அண்ணாமலையாருக்கு பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருக்கின்றனர். அவர்கள் மாடவீதியில் வலம் வந்த பின்புதான் விரதத்தை முடிப்பார்கள் அதனால் மாடவீதியில்  வலம் வருவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 

tiruvannamalai karthigai deepam festival bjp party leaders

இதனையேற்ற காவல்துறையினர், பக்தர்கள் மாட வீதியில் எங்கும் அமரவோ, நிற்கவோ கூடாது என்கிற கட்டுப்பாடுகளை விதித்து மாட வீதியில் மட்டும் வலம் வருவதற்கு அனுமதி அளித்தனர். அதனைத் தொடர்ந்து பக்தர்கள் மாட வீதியை வலம் வந்துக் கொண்டு இருக்கின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'பாஜக ஆட்சிக்கு வந்தால் தேர்தல் பத்திரம் கொண்டு வருவோம்'-நிர்மலா சீதாராமன் 

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
nn

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தேர்தலுக்கு முன்னதாகவே தேர்தல் பத்திரம் தொடர்பான கருத்துக்கள் மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவுகள் இத்தேர்தலில் மிகப்பெரும் பேசு பொருளாக இருந்தது. உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடுக்கப்பட்ட  நிலையில் பாஜக அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டம் என்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனக் கருத்து தெரிவித்த உச்ச நீதிமன்றம், நன்கொடை வழங்கியோர், நன்கொடையைப் பெற்ற கட்சிகளின் விவரங்களை ஆணையத்திடம் வழங்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவோம் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் தேர்தல் பத்திரங்களைக் கொண்டு வருவது தொடர்பாக ஆலோசிப்போம். அனைவரும் ஏற்கத்தக்க வகையில் தேர்தல் பத்திரம் கொண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்வோம். தேர்தல் பத்திரம் வெளிப்படை தன்மையானது, கருப்பு பணத்தை ஒழிப்பதற்கானது என நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Next Story

கல்லூரி மாணவி மரணம்; நீடிக்கும் மர்மம் - போலீஸ் விசாரணை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
College student mysterious passed away in Thiruvarangam

திருவரங்கம் ராஜகோபால நகர் 2-வது தெருவைச் சேர்ந்தவர் கோபி என்கிற கோவிந்தராஜன் (வயது 60). இவர் திருவரங்கம் கோவிலில் சுவாமிக்கு வரக்கூடிய துணிகளை ஏலம் எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ஜெய்ஸ்ரீ(வயது 18). திருச்சியில் உள்ள கல்லூரியில் பி.ஏ ஆங்கில பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். இதற்கிடையில், இவர் திருவரங்கத்தைச் சேர்ந்த கிரோஷ் என்ற வாலிபரைக் காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் கீழ சித்திர வீதியில் உள்ள காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து குதித்து ஜெயஸ்ரீ தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை கோவிந்தராஜன் கொடுத்த புகாரின் அடிப்படையில் திருவரங்கம் போலீசார் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெண்ணிலா மற்றும் போலீசார்  காதலன்  மற்றும் காதலனின் நண்பர்கள் உள்பட ஐந்து பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் இரண்டு பேர் சரித்திர பதிவேடு குற்றவாளி எனவும் தெரிய வந்துள்ளது.அதனால் இது திட்டமிட்ட கொலையா? அல்லது வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்பது குறித்தும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் காதலனின் வீட்டில் போலீசார் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். காதலனின் நண்பர் வீட்டு மாடியிலிருந்து கல்லூரி மாணவி குதித்து தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் திருவரங்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.