சமூக செயற்பாட்டாளர் முகிலன் கடந்த சில மாதங்களுக்கு முன் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து காணாமல் போனார். இது குறித்து தமிழக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தன. இது தொடர்பாக சிபிசிஐடடி விசாரித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் முகிலனின் பள்ளித்தோழர் சண்முகம் ஆந்திராவில் உள்ள திருப்பதியில் நேரில் பார்த்ததாக தெரிவித்துள்ளார்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
திருப்பதி ரயில் நிலையத்தில் உள்ள முதல் மேடையில் முகிலனை பார்த்ததாக தெரிவித்துள்ளார். தாடி வளர்த்திய படி முகிலன் கோஷமிட்டு சென்றதாக தெரிவித்தார். அவர் தற்போது முகிலன் ஆந்திர காவல்துறை பிடியில் உள்ளதாக சண்முகம் தெரிவித்தார். இதனால் காவல்துறை விரைவில் ஆந்திரா விரையும் என தகவல் வெளியாகியுள்ளது.