Published on 06/05/2022 | Edited on 06/05/2022

நேற்று பிளஸ் டூ தேர்வு தொடங்கிய நிலையில் மொழிப்பாட தேர்வில் தேர்வு எழுத விண்ணப்பித்த 8,37,317 மாணவ, மாணவியர்களில் 32,674 பேர் தேர்வுக்கு வரவில்லை என்ற தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் இன்று தொடங்கி நடைபெற்ற 10 ஆம் வகுப்பு தேர்வில் 42,000 மாணவர்கள் ஆப்சென்ட் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இன்று 10 ஆம் வகுப்பு தேர்வு தொடங்கிய நிலையில் தேர்வெழுத மொத்தம் 9,55,139 பேர் பதிவு செய்திருந்த நிலையில் 42,024 பேர் இன்று நடைபெற்ற மொழிப்பாட தேர்வில் பங்கேற்கவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.