Skip to main content

வாழ்த்துகள் தமிழிசை.!!! பாகிஸ்தானில்தான் இருக்கிறது மேலப்பாளையம்..?

Published on 28/09/2018 | Edited on 28/09/2018
tamilisai soundararajan

 

 

"வாழ்த்துகள் தமிழிசை.! முதன் முறையாக எதார்த்தத்தைப் பேசியதற்கு.!" என பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு வாழ்த்து மழைகளை சமூக வலைத்தளங்களில் பதிந்து வருகின்றனர் நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் பகுதி இஸ்லாமிய பொதுமக்கள்.
 

"திருநெல்வேலி மாநகரத்தின் மேலப்பாளையம் பாகிஸ்தானிலா இருக்கிறது" ?- எனக் கேட்டிருக்கின்றார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை. எங்களுக்கும் அந்த கேள்வி உள்ளது. எந்த திட்டம் அறிவிக்கப்பட்டாலும் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் ஒரு பகுதி உண்டு என்றால் அது மேலப்பாளையம் ஆகத்தான் இருக்கும். பாதாளசாக்கடை இணைப்புக்கு வைப்புத்தொகை செலுத்தி வருடக்கணக்கில் ஆகியும் எல்லா பகுதிகளிலும் வரும் பாதாள சாக்கடை திட்டம் இந்த பகுதிக்கு மட்டும் வரவே வராது..அடக்க ஸ்தலம் வேண்டும் என்றாலும் வீதிக்கு வந்து கதறினால் மட்டுமே கிடைக்கும். ஊரில் இருந்து வெளியே செல்ல மாற்று சாலைகள் கிடையாது. ஒரு லட்சம் மக்கள் வசிக்கும் பகுதியில் போதுமான வங்கி கிளைகளோ தானியங்கி பண இயந்திரங்களோ (atm) கிடையாது. திட்டமிட்டு இந்த பகுதியில் மட்டும் மாநகராட்சி வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்படும். வேலைவாய்ப்புகளில் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதாலேயே வாய்ப்புகள் மறுக்கப்படும். முக்கிய அரசியல் கட்சிகள் கூட இப்பகுதியை சேர்ந்த சொந்த கட்சிக்காரர்களுக்கு கட்சி பொறுப்புகளில் வாய்ப்பு மறுக்கப்படும். ஆனால் ஹைதராபாத்தில் அசம்பாவிதம் நடந்தால்கூட இங்கு காவலர்கள் குவிக்கப்படுவர். ஆதலால் எங்களுக்கும் மேலப்பாளையம் மாநகரம் இந்தியாவில் இருக்கிறதா..? என சந்தேகம் வந்தது உண்டு. மேலும்., "செங்கோட்டையில் ஏராளமான தீவிரவாதிகள் பதுங்கி உள்ளனர்" என்று கூறியும் இருக்கின்றார். சொந்த கட்சிக்காரங்க என்று பாராமல் உண்மையை உரக்கச் சொன்ன உங்களுக்கு பாராட்டுக்கள்." என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர் மேலப்பாளையம் பகுதி இஸ்லாமிய பொதுமக்கள். இந்த பதிவு வைரலாக பரவி வருவது குறிப்பிடத்தக்க ஒன்று.
 

முன்னதாக,  விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக செங்கோட்டை சென்ற பா.ஜ.க.வின் மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆலங்குளத்திலேயே போலீஸாரால் நிறுத்தி வைக்கப்பட, அப்பொழுது ஆர்ப்பாட்டத்தில் பேசியவர், "பா.ஜ.க.ஆட்சியில் ஒரு குண்டு வெடிப்பு கூட கிடையாது. குறிப்பிட்ட மதத்திற்கு மட்டும் பாதுகாப்பு அளிக்கின்றது காவல்துறை. அதுபோக, செங்கோட்டையில் தீவிரவாதிகள் இருக்கின்றனர். நெல்லையிலுள்ள மேலப்பாளையம் பாகிஸ்தானில் இருப்பது போல் இருக்கின்றது." எனக் கூறிவைத்தது தான் தற்பொழுது எதிர்வினையாற்றி வருகின்றது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.