Skip to main content

புதுவையில் பிடிபட்ட தமிழக சரக்குகள்!

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

tasmac



கரானோ தொற்று காரணமாக நாடு முழுக்க ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மதுக்கடைகளும் மூடப்பட்டன.
 

கடந்த 7ஆம் தேதி தமிழகத்தில் மதுக்கடைகளை அரசு திறந்தது. ஆனால், அண்டை மாநிலமான புதுச்சேரியில் மதுக்கடைகளைத் திறக்காததால் புதுச்சேரி குடிமகன்கள் தமிழக எல்லை பகுதியிலுள்ள மதுக்கடைகளுக்குப் படையெடுத்தனர்.
 

இந்நிலையில் புதுச்சேரி பகுதியான திருக்கனூர் எல்லையில் அம்மாநில காவல்துறை நடத்திய சோதனையில், இருசக்கர வாகனத்தில் தமிழகத்திலிருந்து மதுவாங்கி வந்த நபர் கைது செய்யப்பட்டு மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 

வழக்கமாக புதுவையிலிருந்து சரக்கு கடத்தி வந்ததாகத் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் கைது என்றே செய்தி படித்த நமக்கு, இந்தச் செய்தி வியப்பாகத் தெரிகிறது. கரானோ ஊரடங்கு வரலாற்றை மாற்றி அமைத்திருக்கிறது.
 

 

 

 

சார்ந்த செய்திகள்