karthi va vaathiyar update

'ஜப்பான்' படத்தைத் தொடர்ந்து நலன் குமாரசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. இது கார்த்தியின் 26வது படமாக உருவாகிறது. மேலும் பிரேம் குமார் இயக்கத்திலும் ஒரு படம் நடித்துள்ளர். இப்படம் அவரது 27வது படமாக உருவாகிறது.

இந்த நிலையில் கார்த்தி இன்று தனது பிறந்தநாளைக்கொண்டாடி வருகிறார். இதையொட்டி ரசிகர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்றன. அந்த வகையில் பிரேம் குமார் படக்குழு படத்தின் தலைப்பு மற்றும் பிறந்தநாள் வாழ்த்துப் போஸ்டரை நேற்று மாலை வெளியிட்டது. மெய்யழகன் என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்தில் அரவிந்த்சாமி ஸ்ரீதிவ்யா, ராஜ்கிரண், ஜெயபிரகாஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சூர்யா, ஜோதிகாவின் 2டி நிறுவனம் இப்படத்தைத்தயாரிக்க கோவிந்த் வசந்தா இசையமைக்கிறார்.

இதனைத் தொடர்ந்து தற்போது நலன் குமாராசாமி படக்குழு தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில் போலீஸ் கெட்டப்பில் கார்த்தி இடம் பெறுகிறார். ‘வா வாத்தியார்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்தப் படத்தில், கார்த்திக்கு ஜோடியாக தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடிக்கிறார். மேலும் ராஜ்கிரண், சத்யராஜ், ஜி.எம்.சுந்தர் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஸ்டுடியோ கிரீன் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். இப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

இந்தப் படத்தின் பூஜை வீடியோ கடந்த மார்ச் 8ஆம் தேதி வெளியானது. அதில் கதாநாயகி குறித்த அப்டேட்டை படக்குழு பகிரவில்லை. ஆனால் தெலுங்கு இளம் நடிகை க்ரித்தி ஷெட்டி நடிப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு க்ரித்தி ஷெட்டி ஐடியை டேக் செய்துள்ளார். அதே சமயம் படப் பூஜை விழாவில் கௌதம் கார்த்திக் கலந்து கொண்டார். அவர் நடிப்பது குறித்து எந்த அப்டேட்டையும் பகிரவில்லை.