Skip to main content

'யார் பிரபந்தம் பாடுவது'-ஓயாத வடகலை தென்கலை மோதல்

Published on 25/05/2024 | Edited on 25/05/2024
'Who sings Prabandham' - the never-ending northern and southern conflict

அண்மையில் மாதங்களுக்கு முன்பு காஞ்சிபுரத்தில் வடகலை தென்கலை மோதல் இரு தரப்பினர் இடையே ஏற்பட்டு ஒருவரை ஒருவர் மாறி மாறி தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் அதேபோல் மீண்டும் காஞ்சிபுரத்தில் வடகலை-தென்கலை பிரிவினர் மோதிக்கொண்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உற்சவ நிகழ்வுளில் திவ்ய பிரபந்தம், வேத பாராயணம் பாடுவது தொடர்பாக நீண்ட காலமாகவே வடகலை தென்கலை பிரிவினருக்கிடையே அடிக்கடி மோதல்கள் வெடிப்பது தொடர்கதை ஆகிய வருகிறது. யார் பிரபந்தம் பாடுவது என இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாவதும் வழக்கமாக ஒன்றாகி விட்டது.

இந்நிலையில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவம் நடைபெற்று வருகிறது. பிரம்மோற்சவம் தொடங்கிய முதல் நாளிலிருந்து காலை மாலை என இரண்டு வேளைகளிலும் வீதி உலா நடைபெற்று வருகிறது. இதில் மீண்டும் வடகலை தென்கலை பிரிவினர் இடையே யார் பிரபந்தம் பாடுவது என்பது தொடர்பாக  மோதல் வெடித்துள்ளது. ஐந்தாம் நாளில் தங்கப் பல்லக்கில் வரதராஜ பெருமாள் வீதி உலா நடைபெற்றபோது இந்திரா காந்தி சாலையில் இருதரப்பினர் மோதலில் ஈடுபட்டுக் கொண்டனர். அப்பொழுது சொல்ல முடியாத ஆபாச வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் மாறி மாறி திட்டிக் கொண்டனர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சார்ந்த செய்திகள்