
'நான் முதல்வன்' என்ற திட்டத்தின் கீழ் பன்னிரண்டாம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கான உயர் கல்விக்கு வழிகாட்டும் 'கல்லூரி கனவு' என்ற திட்டத்தை இன்று சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்த இருக்கிறார். இன்று காலை 9 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பட்டம் மற்றும் பட்டயப் படிப்புகளுக்கு கல்லூரிகளைத் தேர்வு செய்வது குறித்து வழிகாட்டுதல் தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உயர் கல்வித்துறை, தொழில்நுட்ப கல்வி இயக்ககம், பல்கலைக் கழகங்கள் சார்பில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஹெச்.சி.எல் நிறுவனத்திற்கும் திறன் மேம்பாட்டு கழகம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. ஹெச்.சி.எல் நிறுவனம் அரசுப் பள்ளி மாணவர்கள் 2,500 பேரை தேர்வு செய்து பயிற்சி, பணி ஆணை வழங்க ஏற்பாடு செய்துள்ளது. மாணவர்களுக்கு ஹெச்.சி.எல் நிறுவன பயிற்சிக்கான முழு செலவையும் தமிழக அரசே ஏற்க உள்ளது. 'கல்லூரி கனவு' நிகழ்ச்சி ஜூன் 29, 30, ஜூலை 1, 2 ஆகிய தேதிகளில் அனைத்து மாவட்டங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.