Skip to main content

400 கூடுதல் பேருந்துகள்... சென்னை மாநகர போக்குவரத்து கழகம் ஏற்பாடு! 

Published on 09/04/2021 | Edited on 09/04/2021

 

400 extra buses ... Chennai Metropolitan Transport Corporation organizes!

 

தமிழகத்தில் கரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னையில் கரோனா பாதிப்பு அதிகரிப்பால் காய்ச்சல் பரிசோதனை முகாம்களை அதிகப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், நேற்று (08.04.2021) புதிய கரோனா கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

அதன்படி, ஷாப்பிங் மால் உட்பட பெரிய கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். திருமண விழாக்களில் 100 பேருக்கு மிகாமல் பங்கேற்க வேண்டும். இறுதி ஊர்வலங்களில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வர இ-பதிவு வாங்கும் முறை தொடரும். திருவிழாக்கள், மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏப்.10ஆம் தேதியிலிருந்து தடைவிதிக்கப்படுகிறது. ஏப்.10ஆம் தேதியிலிருந்து சென்னை கோயம்பேட்டில் சில்லரை வியாபாரத்திற்கு தடை விதிக்கப்படுகிறது. பார்வையாளர்கள் இன்றி விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி. பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து பயணிக்க மட்டுமே அனுமதி; நின்றுகொண்டு பயணிக்க அனுமதி இல்லை. தியேட்டர்களில் மீண்டும் 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி.

 

அனைத்து தமிழக வழிபாட்டுத் தலங்களில் இரவு 8 மணிவரை மட்டுமே அனுமதி. தேநீர் மற்றும் உணவகங்களில் 50 சதவீத பேர் மட்டுமே  அனுமதிக்கப்பட வேண்டும். ஆட்டோவில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது.

 

பேருந்துகளில் நின்றுகொண்டு பயணிக்க அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை முதல் சென்னையில் கூடுதலாக 400 பேருந்துகளை இயக்க சென்னை போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் காலை மற்றும் மாலை வேளைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால், இந்தச் சிறப்பு ஏற்பாட்டை போக்குவரத்துக் கழகம் செய்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சென்னையை உலுக்கிய வழக்கில் பல வருடங்கள் கழித்து கிடைத்த தீர்ப்பு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
The verdict came after many years in the case that rocked Chennai

கடந்த 2018 ஆம் ஆண்டு சென்னையில் கே.கே.நகரில் கல்லூரியில் பயின்று வந்த கல்லூரி மாணவியை இளைஞர் கொலை செய்த சம்பவத்தில் அந்த இளைஞருக்கு அபாரதத்துடன் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி அஸ்வினி கல்லூரி முடிந்து வெளியே வந்தபோது அழகேசன் என்ற இளைஞரால் கொடூரமாக கழுத்தறுத்துக் கொல்லப்பட்டார்.

மதுரவாயல் பகுதியைச்சேர்ந்தவர் அஸ்வினி. கடந்த 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் சென்னையில் கே.கே.நகர் மேற்கில் உள்ள மீனாட்சி கல்லூரியில் பி.காம். பயின்று வந்தார். தந்தை இல்லாத நிலையில் தாய்தான் அவரை படிக்க வைத்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த அழகேசன் என்ற இளைஞர் அஸ்வினியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். கடைசிவரை அஸ்வினி அழகேசனின் காதலை ஏற்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அழகேசன்,  அஸ்வினியின் வீட்டு வாசலில் வைத்தே கட்டாய தாலி கட்டியுள்ளார். இது குறித்து போலீசில் புகார் தெரிவிக்கவே, போலீசார் அழகேசனை விசாரித்து கண்டித்து அனுப்பி வைத்தனர். ஆனால், அதன்பின்னரும் அஸ்வினியை தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார் அழகேசன். இதனால் மதுரவாயல் பகுதியை விட்டு, உறவினர் வீடான ஜாபர்கான் பேட்டையில் தங்கியிருந்து அங்கிருந்து கல்லூரிக்கு வந்து சென்றார் அஸ்வினி.

இந்நிலையில் 09/03/2018 அன்று மதியம் 2.30 மணியளவில் கல்லூரி முடிந்து வெளியே வந்து, லோகநாதன் தெருவில் நடந்து சென்ற அஸ்வினியை மறித்து காதலை ஏற்கச்சொல்லி வற்புத்தினான் அழகேசன்.  அஸ்வினி மறுக்கவே, சற்றும் எதிர்பாராத விதமாக கத்தியை எடுத்து அஸ்வினியின் கழுத்தை அறுத்தான் அழகேசன். இதில், அலறித்துடித்த அஸ்வினி ஓட முயற்சித்தார். ஆனால், ஓட முடியாமல் ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தார். அஸ்வினியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பொதுமக்கள் அழகேசனை பிடித்து கடுமையாக தாக்கினர்.   அடித்து உதைத்து கை, கால்களை கட்டி சம்பவ இடத்திற்கு போலீசார் வந்ததும் அழகேசனை பொதுமக்கள் அவர்களிடம் ஒப்படைத்தனர்.

இந்த சம்பவம் அந்த நேரத்தில் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ச்சியாக இந்த வழக்கு நடைபெற்று வந்த நிலையில் வழக்கு விசாரணை சென்னை அள்ளிகுளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி முகமது ஃபாரூக் முன்னிலையில் நடைபெற்றது. விசாரணையின் முடிவில் அழகேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், அழகேசனுக்கு ஆயுள் தண்டனை விதித்ததோடு, பத்தாயிரத்து ஐநூறு ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Next Story

சோதனை முயற்சி; சென்னையில் போக்குவரத்து மாற்றம்

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
trial attempt; Traffic change in Chennai tomorrow

சென்னையில் மெட்ரோ பணி காரணமாக சோதனை ஓட்டமாக பல இடங்களில் நாளை  போக்குவரத்து மாற்றம் ஏற்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மெட்ரோ ரயில் பணி காரணமாக அண்ணா மேம்பாலம், நுங்கம்பாக்கம், ஸ்டெர்லிங் சாலை ஆகிய பகுதிகளில் மூன்றாம் தேதி மட்டும் சோதனை ஓட்டமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சேத்துப்பட்டிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி வரும் வாகனங்கள் கல்லூரி சாலை, உத்தமர் காந்தி சாலை வழியாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் அண்ணா மேம்பாலத்தில் இருந்து வரும் வாகனங்கள் எம்ஜிஆர் சாலை வழியே வள்ளுவர் கோட்டம் நோக்கி செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அமைந்தகரை நோக்கிச் செல்லும் வாகனங்கள் நெல்சன் மாணிக்கம் சாலை வழியாக செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தில் இருந்து அண்ணா மேம்பாலம் செல்லும் வாகனங்கள் உத்தமர் காந்தி சாலை வழியாக செல்லும் என அறிவுறுத்தல்கள் கொடுக்கப்பட்டுள்ளது.