
கடலூரில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் கடலூர் புதிய பேருந்து நிலையத்தை, கடலூர் சட்டமன்றத் தொகுதிக்குள் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடலூர் புதிய பேருந்து நிலையத்தை, கடலூர் சட்டமன்றத் தொகுதிக்குள் அமைக்க வலியுறுத்தியும், மாநகராட்சியின் சுகாதார சீர்கேட்டை கண்டித்தும் கடலூரில் கிழக்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நேற்று(4.4.2025) கடலூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தலைமை நிலைய செயலாளர் ராஜசேகர் கலந்து கொண்டு பேசினார்.
அனைத்து பொதுநல இயக்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் வெண்புறா குமார், அறிஞர் அண்ணா தனியார் பேருந்து பொது தொழிலாளர்கள் நலச்சங்க தலைவர் செல்வம், தமிழ்நாடு மீனவர் பேரவை மாநிலச் செயலாளர் கஜேந்திரன், சிகரம் மாற்றுத்திறனாளிகள் நல சங்கத் தலைவர் சையது முஸ்தபா, சமூக நீதிப் பாசறை தலைவர் சாய்ராம் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட இணை செயலாளர் அன்பு, பொருளாளர் சத்யராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதில் கோரிக்கைகள் குறித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டது.