Skip to main content

குடியுரிமை மசோதாவை ஆதரிப்பது எங்கள் கொள்கை என எடப்பாடி கூறுவது கடைந்தெடுத்த பச்சை துரோகம்-ஸ்டாலின் பேச்சு  

Published on 22/12/2019 | Edited on 22/12/2019

குடியுரிமை மசோதாவை ஆதரிப்பது எங்கள் கொள்கை என எடப்பாடி கூறுவது தமிழர்களுக்கு செய்த கடைந்தெடுத்த பச்சை துரோகம், தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள், இந்தியாவை போல மற்ற நாடுகள் குடியுரிமை திருத்த சட்டம் கொண்டுவந்தால் நமது நாட்டின் நிலை என்னாகும் என   திமுக தலைவர் ஸ்டாலின் பேசியுள்ளார்.

மதுரை மூன்றுமாவடி பகுதியில் நடைபெற்ற சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவில் கலந்துகொண்ட திமுக தலைவர் ஸ்டாலின் பேசுகையில், 

எப்போதும் உங்களுடன் நான் இருப்பேன் என்பதை நிருபிக்க நான் வந்திருக்கிறேன், நாளை நடைபெறும் பேரணிக்கு வாழ்த்து பெற வந்திருக்கிறேன், எத்தனை தடைகள் வந்தாலும் பேரணி நடைபெற நீங்கள். வாழ்த்திட வேண்டும் என்பதற்காக வந்திருக்கேன், கலைஞரை தொடர்ந்து நானும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று வருகிறேன், சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவா மாநாடா என்கிற அளவிற்கு எழுச்சியோடு நடைபெறுகிறது, 

 

DMK

 

ஆயர் பேரவை தலைவர் அந்தோணி பாப்புசாமி என்னிடம் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிருக்கிறேன் , அதற்கு என்னை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அதனை வாழ்நாளில் மறக்கமாட்டேன். கலைஞரை போல நானும் உங்களுக்கு துணையாக இருப்பேன். இந்தியா பல்வேறு மதங்களை சுமந்து ஒற்றுமையாக வாழும், மத நம்பிக்கை என்பது அவரவர்களுக்கானது. அனைத்து மதமும் ஒற்றுமையை மட்டும் தான் போதித்துள்ளது. மனிதர்கள் அனைவரும் சமம் என்பது தான் சமத்துவம், அநீதிக்கு எதிராக குரல் கொடு என்பது நீதி என்பவை கிறிஸ்துவம் எடுத்துரைக்கிறது.

எப்போதும் உங்களுடன் நான் இருப்பேன் என்பதை நிருபிக்க நான் வந்திருக்கிறேன். நாளை நடைபெறும் பேரணிக்கு வாழ்த்து பெற வந்திருக்கிறேன். எத்தனை தடைகள் வந்தாலும் பேரணி நடைபெற நீங்கள். வாழ்த்திட வேண்டும் என்பதற்காக வந்திருக்கேன். கலைஞரை தொடர்ந்து நானும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்று வருகிறேன். சமத்துவ கிறிஸ்துமஸ் விழாவா மாநாடா என்கிற அளவிற்கு எழுச்சியோடு நடைபெறுகிறது. ஆயர் பேரவை தலைவர் அந்தோணி பாப்புசாமி என்னிடம் வைத்த கோரிக்கையை நிறைவேற்றிருக்கிறேன். அதற்கு என்னை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார்.

அதனை வாழ்நாளில் மறக்கமாட்டேன், கலைஞரை போல நானும் உங்களுக்கு துணையாக இருப்பேன். இந்தியா பல்வேறு மதங்களை சுமந்து ஒற்றுமையாக வாழும், மத நம்பிக்கை என்பது அவரவர்களுக்கானது, அனைத்து மதமும் ஒற்றுமையை மட்டும் தான் போதித்துள்ளது, மனிதர்கள் அனைவரும் சமம் என்பது தான் சமத்துவம், அநீதிக்கு எதிராக குரல் கொடு என்பது நீதி என்பவை கிறிஸ்துவம் எடுத்துரைக்கிறது. ஒற்றுமைக்கு குந்தகம் விளைவிக்கும் நிலைதான் தற்போது இந்தியாவில் உள்ளது. சமத்துவத்திற்கு ஒற்றுமைக்கும் குந்தகம் ஏற்படும் காரியங்கள் தற்போது நாட்டில் அரங்கேறியுள்ளது, மனிதர்கள் அனைவரும் சமம் என்பதே சமூக குற்றமாக இப்போது பார்க்கபடுகிறது. அனைவரும் சகோதரர்களாக இருங்கள் என்றாலே வித்தியாசமாக பார்க்கின்றனர். 

 

DMK

 

அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் தேச துரோகம் என்பது போல உள்ளது, மதம் பார்த்து இரக்கப்படு என்று சொல்வது தான் தேசபக்தி என்கின்றனர். இந்தியா இதுவரை கட்டிகாத்த அனைத்து நெறிகளையும் பாஜக காலில் போட்டு மிதித்துவிட்டு மோசமான இந்தியாவாக மாற்றியுள்ளனர். அதனால் தான் தற்போது நாடு பற்றி எரிகிறது, பாஜகவிற்கு எதிரான போராட்டம் அல்ல, நீதிக்கும் அநீதிக்கும் எதிரான போராட்டம், மக்களை பற்றி பேசுவது தான் தேசபக்தி பேசாதே என்பது தேசபக்தி இல்லை.

பொருளாதாரம், வேலைவாய்ப்பை உயர்த்துங்கள் என்றால்  அதை பற்றி அரசு கண்டுகொள்ளவில்லை, இதுவரையிலும் உருப்படியான ஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை, மத்திய அரசின் மீறல்களை ஏன் என்று கேட்க கூடிய ஆட்சி இங்கு இல்லை, சிறுபான்மையினரை புறக்கணிக்க கூடிய சட்டம் என்பதால் எதிர்க்கிறோம், மதத்தால் மக்களை பிளவுபடுத்தும் சட்டம் இது, சட்டம் மசோதாவிற்கு ஆதரவு என்பது கூட்டணி தர்மம் என ராமதாஸ் கூறுகிறார் கூட்டணி தர்மம் என்றால் காலில் விழுங்கள் ஆனால் மசோதாவை ஆதரித்தது துரோகம், அநீதிக்கு எதிராக குரல் கொடுத்தால் சமுக விரோதிகள் என்கிறது.

சமத்துவத்திற்கும்,சகோதரத்துவத்த்திற்கும் எதிரானது தான் தற்போது நடக்கும் போராட்டம். குடியுரிமை சட்டம் என்பது அகதிகளுக்கு வாழ்வளிக்க கூடிய உன்னதமான சட்டம் ஆனால் பாஜக அரசின் சட்ட திருத்தம் இஸ்லாமியர்களை புறக்கணிப்பதால் எதிர்க்கிறோம். அனைவருக்கும் சட்டம் பொருந்தும் என்று கூறியிருந்தால் நான் பாராட்டியிருப்பேன். சட்ட திருத்த மசோதா இலங்கை தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். இனத்தால் தமிழர்களை பிரிப்பதை ஏற்க இயலாது, மத்திய அரசின் மசோதா இஸ்லாமியர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் எதிரான மாபெரும் துரோகம், மாநிலங்களவையில் அதிமுகவும் பாமாகவும் எதிர்த்திருந்தால் மசோதா நிறைவேறியிருக்காது. 

குடியுரிமை மசோதாவை ஆதரிப்பது எங்கள் கொள்கை என எடப்பாடி கூறுவது தமிழர்களுக்கு செய்த பச்சை துரோகம், தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். பாஜகவிற்கு இது தான் நடக்கும் என்பதை தெரிந்தே மசோதாவை நிறைவேற்றியுள்ளனர். மலேசிய பிரதமர் மஹாதீர் முஹம்மது மோடி கொண்டுவந்தது போல குடியுரிமை சட்ட மசோதாவை நாங்கள் கொண்டுவரமாட்டோம் என்று கூறியுள்ளார்.

மதசார்பற்ற நாடான இந்தியாவில் இது போன்ற சட்டம் கவலையளிக்கிறது என்றார்,.இந்தியாவை போல மற்ற நாடுகள் இது போன்ற குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவந்தால் நமது நாட்டின் நிலை என்னாகும், இதன் விளைவை மத்திய அரசு உணரவில்லையா? , மோடி இந்தியாவின் சட்ட ஒழுங்கை கெடுத்து  இந்திய மக்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களும் அச்சமடையும் வகையிலான சட்டத்தை நிறைவேற்றியுள்ளது.

கட்சிகளுக்கு அப்பாற்பட்டு மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்திவருகின்றனர், நாளை நடைபெறவுள்ள போராட்டம் நாட்டின் சமத்துவதிற்கான, ஜனநாயகத்திற்கான நீதிக்கான போராட்டம் என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“சர்.பிட்டி தியாகராயர் காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி” - தமிழக முதல்வர் புகழாரம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Chief Minister of Tamil Nadu felicitated for Pioneer of Sir Pitti Thiagarayar Breakfast Scheme

திராவிடக் கட்சியின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் தலைவராக பொறுப்பு வகித்து வந்தவர் சர்.பிட்டி தியாகராயர். இந்திய சுதந்திரத்துக்கு பிறகு, முன்னாள் முதல்வர் காமராஜர் மதிய உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கு முன்பே, அந்த திட்டத்தை சென்னை மாநகராட்சி பள்ளிகளில், சர்.பிட்டி தியாகராயர் தொடங்கி வைத்து முன்மாதிரியாக திகழ்ந்துள்ளார். இவரது நினைவாக தான் சென்னை தியாகராயர் நகர் (தி.நகர்) பகுதிக்கு இவரது பெயர் வைக்கப்பட்டுள்ளது. இன்று (27-04-24) சர்.பிட்டி தியாகராயரின் 173ஆவது பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. 

சர்.பிட்டி தியாகராயரின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘பார்ப்பனரல்லதார் கொள்கைப் பிரகடனம் வெளியிட்டு திராவிட இனத்தின் உரிமைக்குரலை ஓங்கி ஒலித்த தீரர்! அப்பழுக்கற்ற அரசியல் வாழ்வினால் சென்னையின் கல்வி, மருத்துவ வளர்ச்சிக்குத் தூணாக விளங்கிய மக்கள் தொண்டர்!

காலை உணவுத் திட்டத்தின் முன்னோடி!. தேடி வந்த பதவியை மறுத்த மாண்பாளர், நம் வெள்ளுடை வேந்தர் தியாகராயரின் பிறந்தநாளில் அவரது வாழ்வையும் பணியையும் போற்றி வணங்குகிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

‘ரூ. 40 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடு’ - பரபரப்பு போஸ்டர்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Take action against the BJP executives poster

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் விருதுநகர் பாராளுமன்ற தொகுதியில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் மாணிக்கம் தாகூரும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜயபிரபாகரனும், பாஜக சார்பில் நடிகை ராதிகா சரத்குமாரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டமன்ற தொகுதியின் பாஜக பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் ரூ. 40 லட்சத்தை கட்சி நிர்வாகிகளே சுருட்டிவிட்டதாக புகாரை முன்வைத்து போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. திருமங்கலம் பேருந்து நிலையம் உள்ளிட்ட நகர் பகுதி முழுவதும் பாஜக நிர்வாகிகள் 4 பேரின் புகைப்படத்துடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

அதில், “நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! நடவடிக்கை எடு! பா.ஜ.க விருதுநகர் பாராளுமன்ற தேர்தல் பணிக்குழுவினர் செய்த மோசடி குறித்தும், பூத் ஏஜெண்ட்களுக்கு கொடுக்கப்பட்ட நிதியில் சுமார் 40 லட்சம் வரை சுருட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதாவது பா.ஜ.க. பாராளுமன்ற அமைப்பாளர் வெற்றிவேல், மதுரை மேற்கு மாவட்ட தலைவர் சசிக்குமார், மதுரை மேற்கு மாவட்ட செயலாளர் சின்னச்சாமி,  மதுரை மேற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சின்ன இருளப்பன் இவர்கள் மீது பா.ஜ.க. மாநில தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ரூ. 40 லட்சத்தை பாஜக நிர்வாகிகள் சுருட்டியதாக திருமங்கலத்தில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.