Skip to main content

இலங்கைக்கு கடத்தப்பட்ட பீடி இலைகள்...தூத்துக்குடி சண்முகத்தைத் தேடும் சுங்கத்துறை..!

Published on 24/02/2019 | Edited on 24/02/2019

 

   இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு டன் பீடி இலைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் இரண்டு பேரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

b

 

   ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே உள்ள சங்குமால் கடற்கரை பகுதியில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்த உள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற அதிகாரிகள் சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றி கொண்டு இருந்த டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.  அப்போது வாகனத்தில் மூட்டை மூட்டையாக சுமார் ஒரு டன் அளவிற்கு பீடி இலைகள் இருப்பதை அறிந்த அதிகாரிகள் பீடி இலைகளையும் வாகனத்தையும் அதிலிருந்த இரண்டு பேரையும் ராமேஸ்வரம் சுங்கத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விசாரணை மேற்கொண்டதில் தூத்துக்குடி பகுதியில் இருந்து சண்முகம் என்பவருக்கு பீடி இலைகள் கொண்டு வந்ததாகவும், ஆனால் தற்பொழுது அவர் கைபேசியை எடுக்காத நிலையில் அவர் கொண்டு வரச் சொன்ன பகுதியில் அவருக்காக காத்திருந்ததாக வாகனத்தில் இருந்தவர்கள் அதிகாரிகளுடன் தெரிவித்தாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் சண்முகம் என்பவரை தற்பொழுது தேடி வருகின்றனர்.

 

    இந்நிலையில் ராமேஸ்வரம் தீவு பகுதியில் இருந்தது  போதை பொருள், கடல் அட்டை, உரம், தொடர்ந்து கடத்திச்செல்லப்பட்டு வந்த நிலையில் தற்பொழுது பீடி இலைகள் கடத்த முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

சார்ந்த செய்திகள்

 

Next Story

பட்டப்பகலில் பெண் படுகொலை; பரமக்குடியில் பரபரப்பு

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
incident in broad daylight; There is excitement in Paramakudi

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பட்டப்பகலில் டீக்கடையில் பணியாற்றி வந்த பெண்ணை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அண்மையில் காஞ்சிபுரத்தில் பட்டப்பகலில் பெண் காவலர் ஒருவர் கணவரால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் ராமநாதபுரம் பகுதியில் நடந்த இந்த கொலை சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பகுதியில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்த டீக்கடையில் மேகலா என்ற பெண் பணியாரம் சுட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த கத்தியால் மேகலாவை சரமாரியாக குத்தினார். ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்த மேகலா அங்கேயே துடிதுடித்து உயிரிழந்தார். உடனடியாக மணிகண்டனை பிடித்த அக்கம்பக்கத்தினர் அவனை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

incident in broad daylight; There is excitement in Paramakudi

இது தொடர்பான விசாரணையில் கருத்து வேறுபாட்டால் கணவனை பிரிந்து இரண்டு குழந்தைகளுடன் தாய் வீட்டில் வசித்து வந்த மேகலா அந்தப் பகுதியில் உள்ள டீக்கடையில் பணியாற்றி வந்தார். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவருக்கும் மேகலாவிற்கும் இடையே தொடர்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் இருவருக்கும் இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து மேகலா ஏற்கனவே காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இருதரப்பையும் அழைத்த போலீசார் இருவரையும் கண்டித்து அனுப்பி வைத்திருந்தனர். இந்நிலையில் ஆத்திரத்தில் இருந்த மணிகண்டன் டீக்கடையில் பணியாரம் சுட்டுக் கொண்டிருந்த மேகலாவை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. பட்டப்பகலில் டீக்கடையில் பணியாற்றிக்கொண்டிருந்த பெண் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அங்குப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story

“கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டும்” - முதல்வர் வலியுறுத்தல்!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
The Joint Working Group should be renewed CM insists

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் விடுவிக்க இலங்கை அரசை வலியுறுத்திடக் கோரி மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தனது முந்தைய கடிதத்தில் சுட்டிக் காட்டியது போன்று மீனவர்களை கைது செய்தல் மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்கிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அச்சமுதாயத்தினரிடையே மிகுந்த அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 22.06.2024 அன்று, ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 22 மீனவர்கள் IND- TN-10-MM-84, IND-TN-10-MM-88 IND-TN-10-MM-340 ஆகிய எண்களைக் கொண்ட மூன்று இயந்திரப் படகுகளுடன் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். எனவே, இலங்கை அரசால் கைது செய்யப்பட்ட மீனவர்களையும், அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட படகுகளை இலங்கையில் இருந்து கொண்டு வருவதற்கு மீட்புப் படகுகள் மற்றும் பணியாளர்களுக்கு இன்னும் அனுமதி வழங்கப்படவில்லை. 

The Joint Working Group should be renewed CM insists

அதேபோன்று, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மீனவர்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதலும் அடிப்படைத் தேவைகளையும் வழங்கிட அனுமதி தர வேண்டுமென தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்வேறு மீனவர் சங்கங்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளைக் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும். மீனவர்களின் வாழ்வை சீர்குலைக்கும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வுகாண உடனடியாக உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதற்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட கூட்டுப் பணிக்குழுவினை மீண்டும் புதுப்பிக்க வேண்டும். இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைக் காண இலங்கை அதிகாரிகளிடம் எடுத்துரைத்திட உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்” எனத் தனது கடிதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.