Skip to main content

''ஏமாற்றுபவர்களாக இல்லாமல் உங்களுக்கு ஏற்றவர்களை ஏற்றுக்கொள்ளுங்கள்''- தமிழிசை அட்வைஸ்

Published on 30/04/2022 | Edited on 30/04/2022

 

 ''Accept those who are right for you without being deceitful '' - Tamizhisai Advice

 

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மாணவிகள் வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்யும்போது அவர் ஏமாற்றுபவராக இல்லாமல் ஏற்றம் தருபவராக இருக்க வேண்டும் என கூறினார்.

 

அந்த நிகழ்வில் அவர் பேசியதாவது, 'கிடைப்பதை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டு அதில் முழுவதுமாக ஈடுபடுத்திக் கொண்டு அதன் மூலம் நமது பணியை ஆற்றி அதற்குப் பின்பு பல படிகளில் ஏறிக் கொண்டே போக வேண்டுமே தவிர எதற்கும் தயங்கி கீழேயே நின்று விடக்கூடாது.நட்பை வளர்த்துக்கொள்ளுங்கள் மகிழ்ச்சியாக இருங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாதீர்கள். இப்பொழுதெல்லாம் கல்வி கற்கிறார்கள், விரும்பிய வேலைக்காக ஓடுகிறார்கள் ஆனால் குடும்ப வாழ்க்கையை மறந்து விடுகிறார்கள் இளைஞர்கள் பெண்களெல்லாம் இன்று 30,  35 வயதில் தான் வயதிற்குப் பிறகுதான் திருமணத்தைப்பற்றிய சிந்திக்கிறார்கள். ஒரு மருத்துவர் என்ற முறையில் சொல்கிறேன். எப்படி நீங்கள் கல்வியை வளர்த்துக் கொள்கிறீர்களோ அதேபோல் குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுவதும் சரியான நேரத்தில்  தாய் தந்தையர் சொல்வதைக் கேட்டு அமைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 'தாய் சொல்வதையும் கேட்டு' என்ற உடனே தமிழிசை காதல் திருமணத்திற்கு எதிரானவர் என்று ஒரு பதிவு இன்னேரம் வந்திருக்கும். நாமே தேர்ந்தெடுக்கலாம் ஆனால் அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் நமக்கு உரியவர்களாக, ஏமாற்றுபவர்களாக இல்லாமல் ஏற்றவர்களாக... தாய் தந்தை ஏற்றுக்கொண்டு அதன் மூலம் நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்'' என்றார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

இணையதள காதல்; இளைஞருக்கு ஷாக் கொடுத்த இளம்பெண் - பகீர் பின்னணி

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
young woman who cheated a young man by falling in love through the Internet

டெல்லியில் சிவில் தேர்விற்கு படித்துவரும் போட்டித்தேர்வாளர் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் வெர்ஷா என்ற பெயர் கொண்ட ஐடியில் பெண் ஒருவர் பேசி பழகியுள்ளார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் செய்துக்கொண்டு பழகி வந்துள்ளனர். 

இந்த நிலையில், கடந்த ஜூன் 23 ஆம் தேதி வெர்ஷா தனக்கு பிறந்தநாள் என்று தன்னுடன் டின்டர் ஆப்பில் பழகி வந்த போட்டித்தேர்வாளரிடம் கூறியுள்ளார். அதற்கு அவர் வாழ்த்து தெரிவிக்க, இருவரும் சந்தித்து பிறந்த நாள் கொண்டாடலாம் என்று காதலை வெளிப்படுத்தியுள்ளார். இதற்கு சிவில் தேர்விற்கு படித்துவரும் போட்டித்தேர்வாளரும் சம்மதம் தெரிவிக்க, விகாஸ் மார்க்கில் உள்ள பிளாக் மிரர் கஃபேவில் இருவரும் பிறந்த நாள் கொண்டாடியுள்ளனர். அப்போது, வெர்ஷாவிற்கு போட்டித்தேர்வாளர் ஸ்நாக்ஸ், ஆல்கஹால் சேர்க்காத பானங்களை ஆர்டர் செய்துள்ளார். இதன் மதிப்பு சில ஆயிரங்கள் தான் இருக்கும். ஆர்டர் செய்த உணவு டேபிளுக்கு வர இருவரும் பேசிக்கொண்டு உணவருந்தி பிறந்த நாளை கொண்டாடியுள்ளனர். அப்போது, திடீரென வெர்ஷா தனது குடும்பத்தில் பிரச்சனை என்று கூறி டேட்டை முடித்துக்கொண்டு அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பியுள்ளார். உடனே, அவசரம் என்பதால் வெர்ஷாவை அனுப்பி வைத்த போட்டித்தேர்வாளர் கஃபேவில் பில் செலுத்த சென்றுள்ளார். 

அப்போது, 1.2 லட்சத்திற்கான பில்லை பிளாக் மிரர் கஃபே நிர்வாகத்தினர் கொடுத்ததைப் பார்த்து அதிர்ந்துபோனவர் விளக்கம் கேட்டுள்ளார். ஆனால், கஃபே நிர்வாகத்தினர் பணத்தை செலுத்தாமல் இங்கிருந்து நகர கூடாது என்று மிரட்டியுள்ளனர். இதைக்கேட்டு அதிர்ந்துபோனவர் வேறுவழியின்றி ஒரு லட்சத்து 20 ஆயிரம் பணத்தை ஆன்லைனில் செலுத்திவிட்டு நடந்த சம்பவம் குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில்தான் மிகப்பெரிய மோசடி பின்னணி வெளிச்சத்திற்கு வந்தது. சம்பவம் நடைபெற்ற பிளாக் கஃபேவை பாவா, அன்ஷ் க்ரோவர் மற்றும் வன்ஷ் பாவா ஆகிய மூவரும் சேர்ந்து நடத்தி வந்தது விசாரணையில் தெரியவந்தது. பாதிக்கப்பட்ட போட்டித்தேர்வாளரிடம் டிண்டர் ஆப் மூலம் டேட் செய்த வெர்ஷா என்ற பெண்ணும் இவர்களின் கூட்டாளி என்பதை போலீசார் கண்டறிந்தனர். பிளாக் மிரர் கஃபேவில் மேலாளராகப் பணிபுரியும் ஆர்யன் என்பவர் வெர்ஷாவை, டிண்டர் செயலி மூலம் போலியான கணக்கை உருவாக்கி சிவில் தேர்விற்கு படித்து வந்த போட்டி தேர்வாளரை மோசடி வலையில் வீழ்த்தி பணத்தை ஏமாற்றியுள்ளார். அதுபோல, வெர்ஷாவின் உண்மையான பெயர் அஃப்சான் பர்வீன் என்பதையும் போலீசார் கண்டறிந்தனர். 

இந்த மோசடி கும்பலானது டிண்டர் ஆப் மூலம் இளைஞர்களை டேட்டிங் வரவழைத்து மோசடி செய்து வந்துள்ளனர். அதில் கிடைக்கும் பணத்தை வெர்ஷாவிற்கு15 சதவிகிதமும், உதவும் மேலாளர்களுக்கும் பணியாளர்களுக்கும் 45 சதவிகிதமும், மீதமுள்ள 40 சதவிகிதம் கஃபே உரிமையாளர்களுக்கும் பிரித்துக்கொண்டு ஏமாற்றியது போலீஸ் விசராணையில் தெரியவர போலீசார் மோசடியில் தொடர்புடையவர்களை கைது செய்தனர். ஆனால், வெர்ஷா தப்பித்த நிலையில், போலீசார் அவரை தீவிரமாக் தேடினர். அவர், ஷாதி டாட் காம் திருமண ஆப் மூலம் சந்தித்த ஒரு ஆணுடன் டேட் செய்து கொண்டிருந்ததை அறிந்த போலீசார் அவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

' 40 பேரும் அமைதியாக இருந்தது வருத்தமளிக்கிறது' - தமிழிசை வேதனை

Published on 02/07/2024 | Edited on 02/07/2024
'It is sad that all 40 people were silent'- Tamilisai Angam

நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. நீட் தேர்வு, அக்னி வீரர் திட்டம், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் குறித்து ராகுல்காந்தி பாஜகவுக்கு கேள்வி எழுப்பி இருந்தார். அதேபோல் பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. உண்மையான இந்துக்கள் வெறுப்பு, வன்மம் ஆகியவற்றை தூண்ட மாட்டார்கள். ஆனால் பாஜகவினர் வெறுப்பை விதைக்கிறார்கள். 24 மணி நேரமும் பாஜகவினர் வெறுப்பை விதைத்து வருகின்றனர். பாஜகவும், பிரதமர் மோடியும் இந்துக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதி அல்ல' என பல்வேறு குற்றச்சாட்டுகளை சாரம்சமாக வைத்து ராகுல் காந்தி உரையாற்றியிருந்தார். அதேநேரம் இந்துக்கள் குறித்த பேச்சுக்கு ராகுல் மன்னிப்பு கேட்கவேண்டும் என வலியுறுத்திய பாஜக எம்பிக்கள், ராகுலின் கேள்விகளுக்கு பதிலளித்ததோடு கண்டங்களையும் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இப்படி காரசாரமான விவாதங்கள், பதில்கள் நாடாளுமன்றத்தில் நிகழ்ந்ததால் என்றும் இல்லாத அளவுக்கு நள்ளிரவு வரை மக்களவையில் விவாதம் நடைபெற்றது.  இன்று நடைபெறும் நிகழ்வில் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் மோடி இன்று பிற்பகலுக்குப் பிறகு உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து மக்களவையில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசியதில் சில பகுதிகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்துக்கள் குறித்தும் பிரதமர் மோடி குறித்தும் பேசிய சில பகுதிகள் அவைக்குறிப்பில் இடம் பெறவில்லை. அதேபோல் பாஜக, ஆர்.எஸ்.எஸ் ஆகியவை குறித்து ராகுல் முன்வைத்த விமர்சனங்களும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அங்கீகாரம் கொடுக்கப்பட்டிருந்தால் பாராளுமன்றத்தில் இன்னும் சற்று ஆரோக்கியமான ஒரு சூழ்நிலை நிலவி இருக்கும். கடுமையான கண்டனத்தை ராகுல் காந்தி அவர்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என்று சொல்லி ஒட்டுமொத்தமான இந்துக்களையும் அவர் மிகவும் மோசமாக விமர்சித்திருக்கிறார். இதற்கு எங்களுடைய கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அது மட்டுமல்ல ஒரு பாராளுமன்றத்திற்கு என்று விதிமுறைகள் இருக்கிறது; நடைமுறைகள் இருக்கிறது. இதையெல்லாம் மீறி படம் காண்பித்து படம் காண்பித்துக் கொண்டிருந்தார். நேற்று மூன்று அமைச்சர்கள் ராகுல் காந்திக்கு எழுந்து பதில் சொன்னார்கள் என்பதை சிலர் எதிர்மறையாக சொல்கிறார்கள்.

'It is sad that all 40 people were silent'- Tamilisai Angam

ராகுல் காந்தி எல்லாவற்றையும் தவறாக சொல்லிக் கொண்டிருக்கும் பொழுது அமைச்சர்கள் குறுக்கிட்டு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அக்னீவீர் தியாகிகள் நிச்சயமாக நாட்டிற்காக உயிரை ஈந்தவர்கள். அவர்களுக்கு எந்த இழப்பீடும் கொடுக்கவில்லை என்று தவறான கருத்தை ராகுல் காந்தி சொன்னார். உடனே அத்துறையின் அமைச்சர் ராஜ்நாத் சிங் எழுந்து 'இல்லை ஒரு கோடி ரூபாய் அவர்களுக்கு இழப்பீடு கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர்களின் உயிருக்கு ஈடு இணை இல்லை. இருந்தாலும் கொடுக்கப்பட்டிருக்கிறது' என்று தெரிவித்தார். அதேபோல் விவசாய திருத்தச் சட்டம் தொடர்பான தவறான கருத்தையும் ராகுல் காந்தி சொன்னார். அதற்கும் அமைச்சர் பதிலளித்தார். அதேபோல் உள்துறை அமைச்சரும் அவர் சொன்ன கருத்துக்கு பதிலளிக்க வேண்டி வந்தது. ஆனால் நேற்று பாராளுமன்றத்தில் நீங்கள் பார்த்தது ஏதோ தனக்கு விளம்பரம் தேடிக்கொள்ள வேண்டும் என்பதற்காக, முதல் பேச்சை இப்படித்தான் பேச வேண்டும் என்று ஒரு பயிற்சியின்மையோடு, முதிர்ச்சியின்மையோடு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசினார் என்பதாகத்தான் பார்க்க முடிகிறது.

எல்லாவற்றையும் விட மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தக்கூடியது தமிழகத்தில் இருந்து பாண்டிச்சேரி உட்பட 40 எம்.பிக்கள் அங்கிருந்தனர். இந்துக்களின் உணர்வுகள் புண்படும் அளவிற்கு ராகுல் காந்தி பேசினாலும் இந்துக்களின் வாக்குகளை எல்லாம் வாங்கியவர்கள் ஒரு எதிர்ப்பு குரல் கூட கொடுக்காமல் அமர்ந்திருந்ததுதான் நமக்கெல்லாம் வேதனை. இவர்கள் அப்படித்தான் செய்வார்கள். 40 பேர் அங்கே சென்றதால் தமிழகத்திற்கு எந்தப் பலனும் இருக்காது. சத்தம் போடுவார்கள் அவ்வளவுதான்'' என்றார்.