Published on 26/05/2018 | Edited on 26/05/2018


வன்னியர் சங்க தலைவரும், பாமக முன்னாள் எம்எல்ஏவுமான ஜெ.குரு வெள்ளிக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து அவரது உடல் அரியலூர் மாவட்டம், காடுவெட்டி கிராமத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏராளமானோர் திரண்டனர்.
குருவின் உடலை பார்த்து அவரது தாயார் கதறி அழுதார். அப்போது திடீரென மயங்கினார். உடனே குருவின் மகன் அவரை எழுப்பி, ''அழாதே பாட்டி, நான் இருக்கேன், தைரியமா இருங்கன்னு'' ஆறுதல் கூறினார்.