Skip to main content

அறுந்து கிடந்த மின்கம்பி; பறிபோன உயிர்

Published on 28/03/2025 | Edited on 28/03/2025
A severed electric wire; a life lost

மதுரையில் அறுந்து விழுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்த கூலித் தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அடுத்துள்ள மேலக்கால் கிராமம் கிராமத்தைச் சேர்ந்தவர் பிச்சை என்கிற கூலித் தொழிலாளி. வீட்டுக்கு அருகில் திடீரென அறுந்து கிடந்த மின் கம்பியை தெரியாமல் மிதித்த நிலையில் சம்பவ இடத்திலேயே மின்சாரம் தாக்கி கூலித் தொழிலாளி பிச்சை உயிரிழந்தார்.உடனடியாக அங்கு இருந்தவர்கள் மின் துறைக்கு தகவல் கொடுத்து மின் இணைப்பைத் துண்டித்தனர். கூலித் தொழிலாளியின் சடலத்தைப் பார்த்து அவரது உறவினர்களும் அவருடைய மனைவியும் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது.

சார்ந்த செய்திகள்