Skip to main content

நிர்மலா தேவியிடம் சந்தானம் விசாரணை!

Published on 26/04/2018 | Edited on 26/04/2018

கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவியிடம், அதிகாரி சந்தானம் இன்று சிறையில் சென்று விசாரணை நடத்தினார்.

கல்லூரி மாணவிகளை தவறான பாதையில் செல்ல வற்புறுத்தியதாகக் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி, 5 நாட்கள் சிபிசிஐடி விசாரணை முடிந்து நேற்று சாத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். விசாரணைக்காக நிர்மலா தேவியை மீண்டும் காவலில் எடுக்க சிபிசிஐடி கோராததால் அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். மே 9ஆம் தேதி வரை நிர்மலா தேவியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

 

 

இதனிடையே மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் நிர்மலா தேவியிடம் ஆளுநர் பன்வாரிலால் அமைத்த ஒரு நபர் விசாரணைக் குழுவின் தலைவர் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானம் இன்று விசாரணை நடத்தினார்.

மேலும் நிர்மலா தேவி விவகாரத்தில் தொடர்புடைய பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோரிடமும் விசாரணை நடத்த சந்தானம் திட்டமிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்