Published on 23/05/2019 | Edited on 23/05/2019
சேலம் மக்களவை தொகுதியில் ஐந்து சுற்றுகளின் முடிவிலும் திமுக, பிரதான எதிரி அதிமுகவை விட 35480 வாக்குகள் பெற்று தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளார்.

ஐந்தாவது சுற்றில் திமுக 26996 வாக்குகளும், அதிமுக 21153 வாக்குகளும், அமமுக 2160 வாக்குகளும் பெற்றுள்ளன.
ஐந்தாவது சுற்றில் மட்டும் திமுக வேட்பாளர் பார்த்திபன், அதிமுக வேட்பாளர் சரவணனை விட 5843 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார். இதுவரை எண்ணி முடிக்கப்பட்டுள்ள ஐந்து சுற்றுகளிலும் சேர்த்து திமுக வேட்பாளர், அதிமுக வேட்பாளரை விட 35480 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளார்.