
கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட முகலாய கிராமம் நாகூர் கிராமத்தையும் இணைக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வந்தது. தற்போது மேம்பாலப்பணி நிறைவடையும் நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையினால் மேம்பாலத்தில் அமைக்கப்பட்ட புதிய இணைப்பு சாலையானது இரண்டு நாள் மழைக்கே திடீரென உள்வாங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தரமற்ற முறையில் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த பணி பல லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்றதாக பொதுமக்கள் மத்தியில் கூறப்படுகிறது. மேலும் பணி முடிந்து திறப்பு விழா காண்பதற்காக இருக்கும் பாலத்தில் இதுபோன்று நடைபெற்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.