Skip to main content

விஸ்வஹிந்து பரிஷத் தலைவருக்கு அரிவாள் படத்துடன் கொலைமிரட்டல்!

Published on 04/08/2018 | Edited on 27/08/2018

விஸ்வஹிந்து பரிஷத் தஞ்சாவூர் மாவட்ட தலைவர் துரை.திருவேங்கடத்துக்கு தபால் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து அவர் திருநீலக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

threat


தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரம் நடுப்பட்டறை தெருவைச் சேர்ந்தவர் துரை.திருவேங்கடம். இவர் தஞ்சாவூர் மாவட்ட விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் தலைவராக இருந்து வருகிறார். 


இவர் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் சிலைகள் மாயமானது தொடர்பாக பல கட்ட போராட்டங்களை நடத்தியும், அது தொடர்பான மனுக்களை அரசு உயர் அதிகாரிகளுக்கு அனுப்பியும் வந்துள்ளார்.

 

threat

 

 

 

இந்நிலையில் நேற்று திருவேங்கடத்தின்  முகவரிக்கு தபாலில் ஒரு கடிதம் வந்தது, அதனை பிரித்து பார்த்ததும், அதில் அரிவாள் படம் வரைந்து, உலகிலேயே நெ.1 முட்டாளே, நீ இன்னும் சில நாட்களில் படுபயங்கரமாக படுகொலை செய்யப்படுவாய் என எழுதியிருந்தது.


இந்த கடிதத்தை பார்த்ததும் திருவேங்கடம் அதிர்ச்சி அடைந்து திருநீலக்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

சார்ந்த செய்திகள்

Next Story

‘அடுத்தடுத்து குண்டு வெடிக்கும்’ - மின்னஞ்சல் மிரட்டலால் பரபரப்பு

Published on 05/03/2024 | Edited on 05/03/2024
e-mail threat to karnataka cheif miniter and causing panic

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கபே என்ற பிரபல உணவகத்தில் கடந்த 1ஆம் தேதி பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் மர்மப் பொருள் ஒன்று வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவி பலர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் சிக்கியவர்களை மீட்டனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்து தேசியப் புலனாய்வு முகமை தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சிகள் அடிப்படையில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் எந்தெந்த பகுதிக்கு சென்றாரோ அந்தந்த பகுதியில் உள்ள இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இது குறித்து, போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில், கர்நாடகாவில் பேருந்துகள், வழிபாட்டு தலங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகா முதல்வர் சித்தராமையா, உள்துறை அமைச்சர் மற்றும் காவல்துறை தலைவருக்கு மின்னஞ்சலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அண்மையில் பெங்களூரு உணவகத்தில் குண்டு வெடித்த நிலையில், மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மிரட்டல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

விஐடி பல்கலைக்கழகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

Published on 14/12/2023 | Edited on 14/12/2023
 threat to VIT University in vellore

வேலூர் காட்பாடி பகுதியில் உள்ளது விஐடி தனியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம். 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த பல்கலைக்கழகத்தில் சுமார் 30,000க்கும் மேற்பட்ட உள்நாட்டு - வெளிநாட்டு மாணவ - மாணவியர்கள் பயின்று வருகிறார்கள். லட்சக்கணக்கில் நன்கொடை, கட்டணம் செலுத்துபவர்கள் மட்டுமே இதில் பயில முடியும். நாட்டில் போபால், சென்னை உட்பட வேறு சில இடங்களிலும் வி.ஐ.டி கல்வி நிலையம் செயல்படுகிறது. வேலூர் பல்கலைக்கழகத்தின் மீது அரசு நீர் நிலை பகுதிகள் ஆக்கிரமிப்பு உட்பட சில குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் உண்டு.

இந்நிலையில், வேலூர் விஐடி பல்கலைக்கழகத்திற்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. விஐடி பல்கலைக்கழகத்தின் இமெயிலுக்கு,  வெடிகுண்டு வைத்திருப்பதாக மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்ததாக விஐடி பல்கலைக்கழகத்தின் மூலம் வேலூர் மாவட்ட காவல்துறைக்கு இன்று மாலை புகார் அளிக்கப்பட்டது.

வேலூர் மாவட்ட எஸ்.பி. மணிவண்ணன் தலைமையில் 10 பேர் கொண்ட ஆறு குழுக்கள், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட போலீசார் விஐடி பல்கலைக்கழகத்திற்கு விரைந்து சென்று பல்கலைக்கழகம் முழுவதும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறனர். போலீசார் மற்றும் பல்கலைக்கழகத்தின் தரப்பில் மாணவர்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் கூறி வருகிறனர். சோதனையானது தொடர்ந்து நடந்து வருகிறது.