Skip to main content

பள்ளி விடுதியில் மாணவர் குத்திக்கொலை! கொடைக்கானலில் பயங்கரம்!!

Published on 30/07/2019 | Edited on 30/07/2019

 


கொடைக்கானல் பள்ளி விடுதியில் மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில் சக மாணவரை குத்திக்கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

 

b

 

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலில் பவானி காந்திவித்தியாசாம் என்ற தனியார் பள்ளி செயல் பட்டு வருகிறது.  இந்த பள்ளியில் பல்வேறு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தங்கி படித்து வருகின்றனர்.  மாணவ மாணவிகளுக்காக இங்கு தனித்தனி விடுதி வசதியும் உள்ளது.  இந்த பள்ளியில் ஓசூர் பெங்களூர் ரோடு கே சி சி நகரைச் சேர்ந்த சதீஷ் என்பவரது மகன் கபில் ராகவேந்திரன் பத்தாம் வகுப்பு படித்து  வருகிறார்.  அதே பகுதியில் விருதுநகர் செட்டியார் பற்றி ஐயங்கார் காலனியை சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் ஸ்ரீஹரியும் படித்து வருகிறார்.  இருவருக்கும் அங்குள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தனர்.

 

 இவர்களுக்கிடையே உணவருந்தும் வேளையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.  இந்த விவரம் விடுதி கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.  அதில் ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களும் அவர்களை சமாதானம் செய்து வைத்தனர்.


 
இந்த நிலையில் நேற்று இரவு கபில் ராகவேந்திரன் உடன் ஸ்ரீஹரிவுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.  இதனால் கபில் ராகவேந்திரன் மீது ஸ்ரீஹரி ஆத்திரமடைந்தார்.  அப்போது அவர்கள் இருவரும் கைகலப்பில் ஈடுபட்டனர்.  ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். அப்போது மாணவர் ஸ்ரீஹரி கபில் ராகவேந்திரனை ஆவேசமாக கீழே பிடித்து தள்ளினார்.  அதன்பின் ஆத்திரம்  ஸ்ரீஹரி கபில்  கத்தரிக்கோலை எடுத்து கபில்ராகவேந்திரனை உடலில் பல இடங்களில் சரமாரியாக குத்தினார்.  இதில் கழுத்து தலை உடலிலும் பயங்கர காயம் ஏற்பட்டது.  இப்படி படுகாயமடைந்த மாணவர் கபில் ராகவேந்திரன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

 

 மாணவர்கள் முன்னிலையில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.  இதை அடுத்து பள்ளி நிர்வாகத்தினர் கொடைக்கானல் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.  பள்ளியில் ஏற்பட்ட மோதல் குறித்து மாணவர் உயிரிழந்த சம்பவம் குறித்து இரு மாணவர்களின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  பலியான கபில் ராகவேந்திரன் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் உடலை பார்த்து கதறி அழுதனர்.  மேலும் மாணவன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இதனை அடுத்து கொடைக்கானல் போலீசார் ஸ்ரீஹரியை கைது செய்து கொடைக்கானல் மாஜிஸ்ட்ரேட் முன்பு ஆஜர்படுத்தினர்.

 

 மாணவன் உயிரிழந்ததையடுத்து அந்த  பள்ளிக்கும் விடுமுறை அளிக்கப்பட்டது.  கொலை செய்யப்பட்ட மாணவர் கபில் ராகவேந்திரனை கொலை செய்த மாணவர் ஸ்ரீஹரியும் நெருங்கிய நண்பர்கள்.  பள்ளியில் எப்போதும் ஒன்றாகவே அமர்ந்திருப்பர்.  விடுதியிலும் அவர்கள் சேர்ந்து இருப்பது வழக்கம் .  சாப்பிடும் போதும் அவர்கள் ஒன்றாகவே அமர்ந்து சாப்பிடுவார்களாம்.  இப்படி நெருங்கிய நண்பர்கள் இடையே ஏற்பட்ட வாய்த் தகராறு கொலையில் முடிந்துள்ளது.  மாணவர் கபில் ராகவேந்திரன் தந்தை சதீஷ் ஓசூரில் தனியார் வாட்ச் ஷோரூமில் வேலை செய்து வருகிறார்.  அதுபோல்ஸ்ரீஹரி மாணவரின் தந்தை முருகானந்தம் விருதுநகரில் பழக்கடை வைத்துள்ளார்.  

 

 கொலை பற்றிய தகவல் கிடைத்ததும் கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையில் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.  கொடைக்கானல் ஆர்டிஓ சுரேந்திரனும் இச்சம்பவத்தைப் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்.  இச்சம்பவம் கொடைக்கானலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.  

சார்ந்த செய்திகள்