Skip to main content

மேலாண்மை வாரியம் அமைப்பதைத் தடுக்க கர்நாடகா புதிய திட்டம்!

Published on 07/03/2018 | Edited on 07/03/2018
cauvery issue



கர்நாடகாவில் காவிரி விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சிக் கூட்டம் 8 ஆம் தேதி நடக்கிறது. இந்தக் கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் அடிப்படையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மறு சீராய்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்ய முடிவெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு முடியும்வரை மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கூடாது என கர்நாடகா அரசு வலியுறுத்த திட்டமிட்டுள்ளது.
 

சார்ந்த செய்திகள்

Next Story

‘கர்நாடகத்திடம் கற்றுக் கொள்ளுங்கள்’ - தமிழக அரசுக்கு அன்புமணி வலியுறுத்தியுள்ளார்

Published on 26/12/2023 | Edited on 26/12/2023
Anbumani said TN government should learn from the Karnataka government

“தமிழ்நாட்டில் கடைகளின் பெயர்ப் பலகைகள் தமிழில் எழுதப்படுவதை உறுதி செய்ய வேண்டும்” என  பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் பிப்ரவரி மாதத்திற்குள் கன்னட மொழியில் மாற்றப்படவில்லை என்றால், அவற்றின் உரிமங்கள் ரத்து செய்யப்படும் என்று அம்மாநகராட்சி அறிவித்திருக்கிறது. கர்நாடக வணிகத்தில் கன்னடமே ஆட்சி செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது.

கர்நாடகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் 60% பரப்பளவு கன்னடத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும் என்று அம்மாநிலத்தில் சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அச்சட்டத்தை முழு அளவில் செயல்படுத்த முடிவு செய்துள்ள பெங்களூர் மாநகராட்சி, ‘‘பெங்களூரு மாநகருக்கு உட்பட்ட பகுதிகளில் மொத்தம் 1400 கி.மீ தொலைவுக்கு சாலைகளும், உட்புற சாலைகளும் உள்ளன. அவற்றில் உள்ள அனைத்து கடைகளின் பெயர்ப் பலகைகளும் ஆய்வு செய்யப்படும். எந்தெந்த கடைகளின் பெயர்ப் பலகைகளில் 60% கன்னடம் இல்லையோ, அந்த கடைகளுக்கு அறிவிக்கை வழங்கப்படும். அந்தக் கடைகள் தங்களின் பெயர்ப் பலகைகள் 60% அளவுக்கு கன்னடத்தில் எழுதப்பட்டிருப்பதை பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் உறுதி செய்து சம்பந்தப்பட்ட மண்டல ஆணையர்களிடம் கடிதம் அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யத் தவறிய கடைகளின் உரிமங்கள் ரத்து செய்யப்படும்’’ என அறிவித்துள்ளது.

ஒரு மாநிலத்தில், குறிப்பாக மாநிலத்தின் தலைநகரத்தில் உள்ள கடைகளின் பெயர்ப் பலகைகள் அனைத்தும் அந்த மாநிலத்தின் மொழியில் இருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். அந்த வகையில் பெங்களூரு மாநகராட்சியின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது. பெங்களூருவுடன் தமிழகத்தையும், சென்னை மாநகரத்தையும் ஒப்பிடும்போது நிலைமை கண்ணீரை வரவழைக்கும் வகையில்தான் உள்ளது.

தமிழ்நாட்டில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தொடர்பாக 1948 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தில் திருத்தம் செய்து 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி 575 எண் கொண்ட அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ‘‘எல்லா நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளும் தமிழில் இருக்க வேண்டும். பிறமொழிகள் பயன்படுத்த வேண்டும் என்றால், ஆங்கில வரிகள் இரண்டாம் இடத்திலும் ஏனைய மொழிகள் அதற்கு அடுத்தும் வர வேண்டும். பெயர்ப் பலகைகளில் பிற மொழிகளைப் பயன்படுத்தும்போது தமிழ், ஆங்கிலம் மற்றும் ஏனைய மொழிகளுக்கான இடங்கள் 5 : 3 : 2 என்ற அளவில் இருக்க வேண்டும். பெயர்ப் பலகையிலுள்ள எழுத்துக்கள் சீர்திருத்த வரி வடிவில் இருக்க வேண்டும்’’ என்று அந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அதன்பிறகு 46 ஆண்டுகள் ஆகியும் அந்த அரசாணையில் 5% கூட செயல்படுத்தப்படவில்லை என்பதே உண்மை.

சென்னையில் ஆங்கிலத்தில் பெயர்ப் பலகைகள் மின்னுகின்றன. ஆனால், தனித்தமிழில் எழுதப்பட்ட பெயர்ப் பலகைகளை எங்கு தேடினாலும் கண்டுபிடிக்க முடியவில்லை. சென்னையில் மட்டும்தான் என்றில்லை, தமிழ்நாட்டின் எந்த மூலைக்குச் சென்றாலும் கடைகளின்  பெயர்ப் பலகைகளில் அழகுத் தமிழுக்கு மாற்றாக அரைகுறை ஆங்கிலத்தில் தான் காட்சியளிக்கின்றன. அக்காட்சியைக் காண மனம் பொறுக்கவில்லை. இந்த அவல நிலையை மாற்ற வேண்டும் என்று 25 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருகிறேன். 1990களின் நிறைவில் முதலமைச்சராக இருந்த கலைஞரில் தொடங்கி இன்றைய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரை அனைவரும் பெயர்ப் பலகைகளில் தமிழ் இருப்பதை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வருகின்றனர். ஆனால், எதுவும் நடக்கவில்லை.

கடைகளின் பெயர்ப் பலகைகள் தமிழில் எழுதப்பட வேண்டும்; பள்ளிகளில் தமிழ் பயிற்றுமொழியாக்கப்பட வேண்டும்; எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உலகத் தாய்மொழி நாளான கடந்த பிப்ரவரி 21 ஆம் நாளில் சென்னையில் தொடங்கி பிப்ரவரி 28 ஆம் நாள் மதுரை வரை ‘தமிழைத் தேடி’ என்ற தலைப்பில் பரப்புரை பயணம் மேற்கொண்டேன். அந்த பயணத்தின் போது கடைகளின் பெயர்ப் பலகைகளைத் தமிழில் எழுத வேண்டும் என்று வணிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையும், தொழிலாளர் நலத்துறையும் அறிவிக்கைகள் வெளியிட்டன. ஆனால், தொடர் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

கடைகளின் பெயர்ப் பலகைகளில் தமிழை கட்டாயமாக்குவது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம், தமிழில் பெயர்ப் பலகைகளை அமைக்காத கடைகளுக்கு விதிக்கப்படும் அபராதம் பலமடங்கு உயர்த்தப்படுவதுடன், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆணையிட்டது. அதைத் தொடர்ந்து தமிழில் பெயர்ப்பலகை எழுதாத கடைகளுக்கு விதிக்கப்படும் அபராதம் ரூ.2,000 ஆக உயர்த்தப்படும் என்று கடந்த மார்ச் மாதம் தமிழக அரசு அறிவித்தது. ஆனால், அதன் பின்னர் 9 மாதங்களாகியும் இதுவரை அதற்கான அரசாணையை தமிழக அரசு பிறப்பிக்கவில்லை.

தமிழ்ப் பெயர்ப்பலகைகள் தொடர்பாக அரசுக்கு மட்டுமின்றி வணிகர்களுக்கும் வேண்டுகோள் விடுத்தேன். சென்னை உள்ளிட்ட பல நகரங்களில் வணிகர்களை நேரில் சந்தித்து துண்டறிக்கை வழங்கினேன். அதைத் தொடர்ந்து ஒரு சில வணிகர்கள் தமிழில் பெயர்ப்பலகைகளை அமைத்தாலும்  பெரும்பான்மையான வணிகர்கள் அதற்குத் தயாராக இல்லை. கடுமையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலமாகத்தான் பெயர்ப்பலகைகளில் அன்னை தமிழ் இருப்பதை உறுதி செய்ய முடியும்.

எனவே, பெங்களூரு மாநகராட்சியைப் போன்று தமிழக அரசும் இதில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். பெயர்ப்பலகைகளில் 50% தமிழ் இல்லாத கடைகளின் உரிமத்தை ரத்து செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளின் மூலம் பெயர்ப்பலகைகளில் தமிழ் வாழ்வதை அரசு உறுதி செய்ய வேண்டும். உலகத் தாய்மொழி நாளான பிப்ரவரி 21 ஆம் நாளுக்கும் இதைத் தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

Next Story

''செயற்கையான நெருக்கடியை கர்நாடக அரசு உருவாக்கி வருகிறது'' - பேரவையில் முதல்வர் பேச்சு

Published on 09/10/2023 | Edited on 09/10/2023

 

"Karnataka government is creating an artificial crisis" - Chief Minister's speech in the assembly

 

தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் அக்டோபர் 9 ஆம் தேதி கூடும் எனத் தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன்படி, பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர், இன்று (09.10.2023) காலை 10 மணிக்கு கூடியது. தொடர்ந்து கேள்வி, பதில் விவாதம் நடைபெற்றது.

 

அதனைத் தொடர்ந்து காவிரி விவகாரத்தில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவைக் கர்நாடக அரசு நிறைவேற்ற உத்தரவிடக் கோரி, தமிழக அரசு சார்பில் தனித் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான உரையை தமிழக முதல்வர் தொடங்கினார். அவரது உரையில், '' இந்த அரசு பொறுப்பேற்ற பின்பு காவிரி டெல்டா உழவர்களுக்காக மேட்டூர் அணையானது சீராகத் திறந்து விடப்பட்டு வருகிறது. 2021 ஆம் ஆண்டு மேட்டூர் அணை குறிப்பிட்ட தேதியான ஜூன் 12-ஆம் நாள் அன்று திறக்கப்பட்டது. 2022 ஆம் ஆண்டும் முன்கூட்டியே மே மாதம் 24 ஆம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. காவிரி டெல்டா பகுதியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள வாய்க்கால்கள் திட்டமிடப்பட்டு சீரமைக்கப்பட்டதால் காவிரி நீர் கடைமடை வரை சென்று பயிர்கள் செழித்தன. இதன் பயனாக 2021-22 ஆண்டில் 46.2 லட்சம் டன் அளவிலும், 2022-23 ஆம் ஆண்டில் 45.9 லட்சம் டன் அளவிலும் காவிரி பாசன பகுதியில் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப்பெரிய சாதனையை படைத்தோம். உற்பத்தியும் பெருகியது. உற்பத்தி பரப்பும் விரிவடைந்தது. இந்த சாதனையானது இந்த ஆண்டும் தொடர்ந்தது.

 

இந்த ஆண்டில் ஜூன் ஒன்று நிலவரப்படி மேட்டூர் அணையிலிருந்த 69.7 டி.எம்.சி நீர் அளவையும், தென்மேற்கு பருவமழை முன்னறிவிப்பையும் கருத்தில் கொண்டு 12.6.2023 அன்று மேட்டூர் அணையைக் குறுவை பாசனத்திற்காக திறந்து வைத்தோம். மேட்டூர் அணையின் நீர் இருப்பு 50 டி.எம்.சிக்கு மேலாக உள்ளபோது உழவர்கள் பருவத்தே பயிர் செய்ய ஏதுவாக இருந்தது. மேட்டூர் அணை ஜூன் 12 ஆம் நாள் திறப்பது வழக்கமாக உள்ளது. அதனை முறைப்படி திறந்து வைத்தோம். நமது உழவர் பெருமக்களும் கடந்த ஆண்டுகளைப் போலவே குறுவை பயிர் இந்த ஆண்டும் சிறப்பாகப் பயிரிட அனைத்து பணிகளையும் மேற்கொண்டார்கள். இத்தகைய நிலையில் செயற்கையான ஒரு நெருக்கடியை கர்நாடக மாநில அரசு உருவாக்கி வருகிறது. கர்நாடகா மாநில அரசு நமக்கு வழங்க வேண்டிய உரிய தண்ணீரை இந்த மாதத்தில் திறந்து விடவில்லை. இது தொடர்பாக நாம் எடுத்த முயற்சிகளை இந்த மாமன்றத்தில் விரிவாகச் சொல்ல வேண்டியது என்னுடைய கடமை. காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டுவதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. ஆளுங்கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் காவிரி உரிமையைக் காப்பதில் திமுக உறுதியுடன் இருக்கும்'' என்றார்.