Skip to main content

கர்நாடகாவில் இருந்து கடத்தி கொண்டு வரப்பட்ட மதுபாட்டில்கள்... ஒருவர் கைது! 

Published on 13/02/2020 | Edited on 13/02/2020

கள்ளக்குறிச்சி மாவட்டம் வடகீரனூர் பேருந்து நிலையம் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தி கொண்டு 675 வெளிமாநில மதுபான பாட்டில்களை மதுவிலக்கு போலீஸார் பறிமுதல் செய்தனர். 

kallakurichi district police inspection two wheeler seizured and one person arrest

விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு ஆய்வாளர் கோவிந்தராஜூக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருக்கோவிலூ் மது அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் அசோகன் தலைமையில் காவலர்கள் மற்றும் விழுப்புரம் மத்திய புலனாய்வு பிரிவு தலைமை காவலர் குமரன் இணைந்து, வடபொன்பரப்பி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வடகீரனுா் பேருந்து நிலையத்தில் இருந்து பிரம்மகுன்றம் நோக்கி அதிவேகமாக சென்ற இருசக்கர வாகனம் TN15-T-9603 எண் கொண்ட மெருன் கலா் ஹோண்டா ஆக்டிவா- வை நிறுத்தி சோதனை செய்ததில் கர்நாடகாவில் இருந்து மதுபான பாட்டில்களைக் கடத்திக் கொண்டு வரப்பட்டது தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து இரு சக்கர வாகனத்தில் இருந்த் 672 மதுபான பாட்டில்களையும், இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்ததோடு வாகனத்தை ஓட்டி வந்த ஓட்டுனரையும் போலீஸார் கைது செய்தனர். 
 

பின்னர் திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் ஒப்படைத்து விசாரணை செய்ததில் வாகனத்தின் ஒட்டுனர் குபேந்திரன் (43) என்பதும், இவர் கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுக்காவை சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது. பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் மற்றும் மது பானங்களின் மொத்த மதிப்பு ரூபாய் 1,50,000 இருக்கும் என்று கூறப்படுகிறது. 

 

சார்ந்த செய்திகள்