நாகர்கோவிலில் தீயணைப்பு வீரர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த நிலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
நாகர்கோவில் மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் நாகர்கோவில் தீயணைப்பு மீட்பு பணிகள் நிலையத்தில் பணியாற்றி வந்தார். கருப்பசாமி ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர் என்று கூறப்படுகிறது. இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 17 லட்சம் ரூபாய் பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் விரக்தியில் இருந்த கருப்பசாமி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே தமிழகத்தில் பல்வேறு இடங்களில் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்தவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்து கொண்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனைத் தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டங்களை தடைசெய்ய வேண்டும் என எதிர்ப்புகள் கிளம்பின. இந்நிலையில் தீயணைப்பு வீரர் ஒருவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்த நிலையில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.