Skip to main content

நள்ளிரவு ரெய்டு - கருக்கலைப்பு மையத்துக்கு சீல்

Published on 02/12/2018 | Edited on 02/12/2018
s


இந்தியாவில் உள்ள சுகாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களை விட சுகாதாரத்தில் முன்னேறிய மாநிலம் தமிழகம். அப்படிப்பட்ட தமிழகத்தில் திருவண்ணாமலை மாவட்டம்  கரு கலைப்பு செய்வதில் முன்னிலையில் உள்ளது. இதனால் பெண் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதாக கூறி ஆய்வு நடத்தியது.


அதில், திருவண்ணாமலை நகரில் பதிவு பெற்ற மருத்துவர்கள் சிலர் ஆலோசனையின் பேரிலும், போலியாகவும் பலர் கருக்கலைப்பு செய்கிறார்கள் என்கிற விவரம் கிடைத்தது. அதோடு, கருவில் உள்ளது ஆணா?, பெண்ணா என்பதை கண்டறிந்தும் சொல்கிறார்கள் என்கிற தகவலும் கசிந்தது.

 

s


அந்த ஆதாரங்களை வைத்துக்கொண்டு மத்திய சுகாதாரத்துறையில் இருந்து வந்த அதிகாரிகள் திருவண்ணாமலையில் இயங்கிய ஏழுக்கும் மேற்பட்ட ஸ்கேன் சென்டர்களில் ரெய்டு செய்து 3 ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைத்தது. அதேப்போல் திருவூடல் தெருவில் உள்ள மருத்துவர் செல்வாம்பாள் மருத்துவமனைக்கும் சீல் வைத்தது.


இந்நிலையில் டிசம்பர் 1ந்தேதி வேங்கிக்கால் பகுதியில் ஒரு பங்களாவில் கருக்கலைப்பு நடைபெறுவதாக வந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் இருந்து வந்த சுகாதாரத்துறை டீம், 4 மாத கர்ப்பிணி பெண்ணை கருக்கலைப்புக்கு என அனுப்பிவைத்தது. அங்கிருந்த ஆனந்தி என்கிற பெண்மணி, ரேட் பேசி பணம் வாங்கிக்கொண்டு கருக்கலைப்புக்கு தயாராகியுள்ளது. அப்போது அந்த வீட்டுக்குள் அதிரடியாக புகுந்த மருத்துவ அதிகாரிகள் டீம், ஆய்வு செய்தது. ஆய்வில் உள்ளே ஸ்கேன் கருவி இருந்ததை கைப்பற்றியது. கருக்கலைப்புக்கு தேவையான மருந்து, ஊசி, மாத்திரைகள் இருந்ததை கைப்பற்றியது.

 

s


மருத்தவம் பயிலாத, தனியார் கிளினிக்கில் கம்பவுண்டராக வேலை செய்த ஆனந்தி, அவரது கணவர், புரோக்கராக செயல்பட்ட ஆட்டோ டிரைவர் என மூவரை கைது செய்துள்ளது திருவண்ணாமலை கிழக்கு காவல்நிலைய போலிஸ். தொடர்ந்து மருத்துவதுறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.


கைதான இந்த பெண்மணியும், அவரது கணவரும் ஏற்கனவே இரண்டு முறை இதே காரணங்களுக்காக கைதானவர்கள் என்பது குறிப்பிடதக்கது.

 

சார்ந்த செய்திகள்