Published on 11/10/2020 | Edited on 11/10/2020

அரியலூரில் ஆறாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற வி.சி.க பிரமுகர் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த வெள்ளையன் என்பவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய பொறுப்பாளராக இருந்து வரும் நிலையில், ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவியை தனியாக அழைத்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக கூறப்படுகிறது. பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்த முயன்ற போது சிறுமி கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்து சிறுமியை மீட்டனர். அங்கிருந்து தப்பிச் சென்ற வெள்ளையன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
6 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சித்த அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.