
தமிழக அரசின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அலட்சியம் காட்டினால் தனியார் மருத்துவமனைகள் திட்டத்திலிருந்து நீக்கப்படும் என தமிழக மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ''காப்பீட்டு திட்டத்தை தனியார் மருத்துவமனைகள் யாரும் இலவசமாக செய்துதரவில்லை. அரசின் பணத்தை வாங்கிக்கொண்டுதான் மருத்துவம் பார்க்கிறார்கள். எனவே பயனாளிகளுக்கு அலட்சியம் கட்டுவதோ இழுத்தடிப்பதோ தனியார் மருத்துவமனைகள் மூலம் நிகழ்ந்தால் 104 என்ற எண்ணில் புகாரளிக்கலாம். அவ்வாறு புகாரளித்தால் அந்த மருத்துவமனை விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு அரசின் மருத்துவக்காப்பீட்டு திட்டத்தைச் செயல்படுத்தும் 900 தனியார் மருத்துவமனைகளின் பட்டியலிலிருந்து நீக்கப்படுவதோடு, சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.