Published on 17/01/2025 | Edited on 17/01/2025
அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் அதிமுக-பாஜக கூட்டணி குறித்து ஆடிட்டர் குருமூர்த்தி பேசி இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அவரது பேச்சால் மீண்டும் அதிமுக-பாஜக கூட்டணி அமையுமா என்ற கேள்விகள் எழுந்திருந்தது.
இந்நிலையில் இது குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துப் பேசுகையில், ''அதிமுக பாஜக கூட்டணி பற்றி பேசுவதை குருமூர்த்தி இத்தோடு நிறுத்திக்கொள்ள வேண்டும். குருமூர்த்தி வாயை அடக்காவிட்டால் வாங்கி கொட்டிக் கொள்வார். 2026 அதிமுக-பாஜக கூட்டணியில் இல்லை என்பது அதிமுக கட்சித் தலைமை எடுத்த முடிவு. தேர்தலுக்கு அஞ்சும் கட்சி அதிமுக இல்லை. 2026 தேர்தலில் ஸ்டாலினுடைய பாட்சா பலிக்காது'' என காட்டமாக தெரிவித்துள்ளார்.