நெல்லையில் ஊர்க்காவல் படையை சேர்ந்தவரும் தனியார் நிறுவனத்தின் காவலாளியும் கட்டி புரண்டு நடு சாலையில் சண்டை போட்டுக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தில் ஊர்க்காவல் படையை சேர்ந்த நபர் மது போதையிலிருந்து தெரியவந்துள்ளது.
ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பிரம்மநாயகம் என்பவர் தலை நிற்காத போதையில் இருசக்கர வாகனத்தில் வந்துள்ளார். அப்பொழுது சாலையில் வாகனத்தை நிறுத்திவிட்டு தனியார் நிறுவன காவலாளி ஒருவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தனியார் நிறுவன காவலாளி, ''இறங்கி வால பார்த்துக்கலாம்'' என நெல்லை மொழியில் பேச, இருவரும் இடையே வாக்குவாதம் முற்றியது. முழு போதையில் இருந்த ஊர்காவல் படையைச் சேர்ந்த பிரம்மநாயகம் இறங்கி கையில் வைத்திருந்த ஹெல்மெட்டால் தனியார் நிறுவன காவலாளியை மண்டையிலேயே தாக்கினார். முதல் அடியை வாங்கி பொறுத்துக் கொண்ட அந்த நபரை மீண்டும் பிரம்ம நாயகம் இரண்டாவது முறை ஹெல்மெட்டால் தாக்கினார். இதனால் ஆத்திரமடைந்த காவலாளி பிரம்ம நாயகத்துடன் கட்டி புரண்டு சண்டை போட்டார். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.