கலைஞர் எப்போதும் புதுமையாக சிந்திக்கிறவர். எதையும் வித்தியாசமாக முயன்று பார்க்கக் கூடியவர். அந்த வகையில் தனது 21 ஆம் வயதில் ஈரோட்டில் தந்தை பெரியாரிடம் பணியாற்றிய போது, தனது நண்பரான திருவாரூர் கு. தென்னனுக்கு குறும்பு கொப்பளிக்க, எப்படிக் கடிதம் எழுதுகிறார் பாருங்கள்.
தோழர் தென்னன் அவர்களே! வணக்கம். தங்கள் உடல் நலத்தை அறிய ஆவல் மிகவும். C.D.M. கடிதத்தில் விளக்கம் காணவும். 9.12.45-ல் குற்றாலம் உண்டா? என்பதை எழுதவும். எப்போதும் போல், அலட்சியம் வேண்டாம். ராமநாத அண்ணனுக்கும் v.s.p.யாகூப்புக்கும் வணக்கம் கூறவும். எல்லாவற்றுக்கும் பதில். வீட்டைப் பார்த்துக்கொள்ளவும். T.P.R?
மு.க.
அன்பு!
இந்த கடிதம் இனிய உதயத்தில் பிரசுரம் செய்யப்பட்டு, கலைஞரிடம் தரப்பட்டது. ஏற்கனவே பார்த்துவிட்டேன் என்று கூறி மகிழ்ச்சியடைந்தார்.