Skip to main content

நிறைவேறும் பழங்குடியின மக்களின் உயர் கல்வி கனவு!

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

Higher education dream of tribal people to come true!

 

கோவை மாவட்டம் ஆனைக்கட்டி பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று அரசு உயர்நிலைப்பள்ளி, மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லைப் பகுதியில் ஆனைக்கட்டி மலைக்கிராமம் அமைந்துள்ளது. 

 

இந்தப் பகுதியில் உள்ள பழங்குடியின மாணவ, மாணவிகள் 213 பேர் அரசு உயர் நிலைப் பள்ளியில் பயின்று வருகின்றனர். சுற்றுவட்டாரத்தில் உள்ள பழங்குடி மாணவர்களுக்கும், கேரளாவில் உள்ள தமிழ் மாணவர்களும் கல்வி கற்கவும் இந்தப் பள்ளி பெருந்துணையாக இருந்து வருகிறது. அதேசமயம் அந்தப் பள்ளி மேல் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்படாததால், பல கிலோ மீட்டர் தூரம் பயணித்து, சின்னத்தடாகம் பகுதியில் உள்ள பள்ளிக்குச் செல்ல வேண்டிய நிலை இருந்தது. 

 

இதனால் மாணவர்கள் சிரமத்திற்கு உள்ளாகி வந்ததோடு, பள்ளியைவிட்டு நிற்பதும் அதிகரித்து வந்தது. இதன் காரணமாக அப்பள்ளியை மேல் நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என ஆனைக்கட்டி பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர். 

 

அப்பகுதி மக்கள் மற்றும் மாணவர்களின் நீண்ட கால கோரிக்கை தற்போது நிறைவேறியுள்ளது. புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டுதல், ஆசிரியர்கள் நியமித்தல் உள்ளிட்டவைகளுக்காக 1 கோடியே 79 இலட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


இதற்கு அப்பகுதி மக்கள் வரவேற்பும், நன்றியும் தெரிவித்துள்ளனர். அதேசமயம் மாணவ, மாணவர்கள் பயன்பெறும் வகையில் இந்த கல்வியாண்டில் இருந்தே மாணவர்கள் சேர்க்கையை துவக்க வேண்டுமென மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்தாண்டு 11ஆம் வகுப்புகள் துவக்கப்பட்டால் கடந்த கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகள் தொடர்ந்து சிரமமின்றி பயில உதவியாக இருக்குமென அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். 

Higher education dream of tribal people to come true!

 

மேலும், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாகவும், கலை மற்றும் தொழில் பாடப்பிரிவுகளும் துவங்க வேண்டுமென அரசிற்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனைகட்டியை ஒட்டியிருக்கும் கேரளாவில் வசிக்கும் மாணவி மெரீனா ஜென்சி இந்தப்பள்ளியில்தான் பத்தாம் வகுப்பு படித்து முடித்துள்ளார். 

 

Ad


ஆனைகட்டி பள்ளியில் மேல்நிலை வகுப்புகள் இல்லாததால் தற்போது தேனியில் பாட்டி வீட்டில் இருந்து +1 வகுப்பு படித்து வருகிறார். ஆனைகட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் இந்தாண்டே +1 வகுப்புக்கான சேர்க்கையைத் தொடங்கி இருந்தால் தன்னை போன்ற மலைவாழ் மக்களுக்கு உதவியாக இருக்கும் என்றார் கனத்த மனதோடு.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘ஜெய் ஸ்ரீராம்’ முழக்கத்தோடு பள்ளி மீது தாக்குதல்; வெளியான அதிர்ச்சி வீடியோ!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Incident on school chanting Jai Sriram  Shocking video released in telangana

தெலுங்கானா மாநிலம், மன்செரியல் மாவட்டம், கண்ணேபல்லி கிராமத்தில் அன்னை தெரசா உயர்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில், அந்தக் கிராமத்திலும், அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் இருந்தும் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று(18-04-24) 50க்கும் மேற்பட்டவர்கள் காவி உடை அணிந்து, இந்தப் பள்ளிக்குள் நுழைந்து, அங்கிருந்த அன்னை தெரசா சிலை உள்ளிட்டவற்றின் மீது கல் வீசி பயங்கர தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும், அவர்கள் ஜெய்ஸ்ரீ ராம் என்று முழக்கமிட்டவாறு அந்தப் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதத்ளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தத் தாக்குதல் தொடர்பான வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், இந்தச் சம்பவம் குறித்து பள்ளியின் முதல்வரான கேரளாவைச் சேர்ந்த ஜெய்மன் ஜோசப்பிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு காவி நிற உடை அணிந்து சில மாணவர்கள் பள்ளிக்கு வந்துள்ளனர். இதனைக் கண்ட அப்பள்ளி முதல்வர், அந்த மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தியுள்ளார்.

அதற்கு அந்த மாணவர்கள், 21 நாள்கள் அனுமன் தீட்சை சம்பிரதாயத்தைக் கடைபிடிப்பதாக கூறியுள்ளனர். அதனால், பள்ளி முதல்வர், மாணவர்கள் தங்களுடைய பெற்றோர்களைப் பள்ளிக்கு அழைத்து வருமாறு கூறியுள்ளார். இதன் காரணமாக, இன்று காவி உடை அணிந்து வந்த கும்பல் பள்ளி மீது தாக்குதல் நடத்தியுள்ளனர் என்பது தெரியவந்தது.. .

மேலும், இந்தத் தாக்குதலில் பள்ளி முதல்வர் ஜோசப்பை சுற்றி வளைத்து அடித்து, அவரது நெற்றியில் வலுக்கட்டாயமாக திலகமிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து, மாணவர்களின் பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில், மத உணர்வுகளைத் தூண்டுதல், மதத்தின் அடிப்படையில் பகைமையை வளர்ப்பது தொடர்பான பிரிவுகளின் கீழ் பள்ளி முதல்வர் உட்பட இரண்டு ஊழியர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

‘கோவை ரைசிங்’ - திமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
Coimbatore Rising DMK election report release

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை மக்களவைத் தொகுதிக்கான திமுக தேர்தல் அறிக்கையை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் ஆகியோர் வெளியிட்டனர். இந்த தேர்தல் அறிக்கையில், “கோவை மாவட்டத்தில் பன்னோக்கு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும். கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் விரைந்து மேற்கொள்ளப்படும். சென்னை, கோவை, தூத்துக்குடி இடையே பிரத்யேக சரக்கு வழித்தடம் அமைக்கப்படும். மேட்டுப்பாளையம் - சத்தியமங்கலம் - கோபிசெட்டிபாளையம் - ஈரோடு இடையே அகல ரயில் பாதை திட்டம் நிறைவேற்றப்படும். ரயில் பராமரிப்பு வசதிகள் கோவையில் உருவாக்கப்படும்.

கோவை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் விரைந்து முடிக்கப்படும். கோவையில் நகர போக்குவரத்து ஆணையம் அமைக்கப்படும். கோவையில் புதிய தொழில் ஹப் தொடங்கப்படும். கோவையில் உள்ள நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கோவையில் குறு தொழில் செய்யும் நிறுவனங்களுக்கு தொழில் பூங்கா அமைக்கப்படும். கோவையில் உள்ள நீர்நிலைகளில் நீர் மாசுவைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.