Skip to main content

அரசு பேருந்தும் ஆட்டோவும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஒருவர் பலி!

Published on 21/05/2025 | Edited on 21/05/2025

 

Government bus and auto collide head-on

பெங்களூருவை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சுந்தரவாசன்(69) இவரது மனைவி சுமதி. இவர்கள் இருவரும் ராணிப்பேட்டையில் உள்ள தங்களது உறவினரை சந்தித்துவிட்டு மீண்டும் சொந்த ஊரான பெங்களூருக்குச் செல்ல பழைய காட்பாடியை சேர்ந்த விவேகானந்தன் என்பவரின் ஆட்டோவில்  காட்பாடி ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளனர்.

அப்போது காட்பாடி தாராபடவேடு வி.ஏ.ஓ அலுவலகம் அருகில் வேலூரை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்தும் ஆட்டோவும் எதிர்பாராத விதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் சுந்தரவாசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். மனைவி சுமதி மற்றும் ஆட்டோ ஓட்டுநர் தூக்கிவீசப்பட்டுள்ளனர்.  தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு  வந்த காட்பாடி காவல் துறையினர் இருவரையும் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இறந்த சுத்தரவாசன் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காட்பாடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அரசு பேருந்து ஆட்டோ மோதி விபத்துக்குள்ளாகிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. வேலூர்- காட்பாடி சாலையில் ஆட்டோக்கள் மின்னல் வேகத்தில் விதிமுறைகளை மீறி ஓட்டுகின்றனர். மேலும் அதிக வேகத்தில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன என பொதுமக்கல் தெரிவித்துள்ளனர். 

சார்ந்த செய்திகள்