Skip to main content

சீறிப் பாய்ந்த காளைகள்..  ஈரோடு ஜல்லிக்கட்டு குதூகலம்... (படங்கள்)

Published on 18/01/2020 | Edited on 18/01/2020

 

ஜல்லிக்கட்டு போட்டிக்கான தடை ஏற்பட்டு பிறகு அந்தத் தடை மாணவர்கள் இளைஞர்கள் படையால் உடைக்கப்பட்டு ஜல்லிக்கட்டு போட்டிக்கு தமிழகம் முழுக்க ஏகோபித்த ஆதரவை கொடுத்தது கடந்த இரு வருடங்களாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடைபெறத் தொடங்கியது.

அப்படித்தான் மேற்கு மண்டலமான ஈரோட்டில் சென்ற ஆண்டு முதன்முதலாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டு இன்று காலை பெருந்துறை சாலையில் உள்ள ஏ.ஈ.டி. பள்ளி மைதானத்தில் தொடங்கியது. மாலை வரை தொடர்ந்து நடைபெற்று சுமார் 300 காளைகள் 300 மாடுபிடி வீரர்கள் இதில் பங்கு பெற்றனர்.

ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமையில் விழா தொடங்கியது. மாவட்ட அமைச்சர்களான கே.ஏ செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன் மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டனர். காளைகளின் வீரவிளையாட்டு தொடங்கியதும் வாடிவாசல் திறக்கப்பட்டது. ஒவ்வொரு காளைகளும் சீறிப்பாய்ந்து திமிறிக்கொண்டு ஆவேசத்துடன் அந்த காளைகளின் ஆட்டம் வெகு கோலாகலமாக இருந்தது.

சுமார் 14 காளைகளை அடக்கி மதுரையைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞர் முதல் பரிசைப் பெற்றார். இரண்டாவது பரிசை 11 காளைகளை அடக்கி நத்தத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் பெற்றார். இதில் சிலருக்கு லேசான காயமும், ஓரிருவருக்கு கூடுதலான காயம் ஏற்பட அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இதைக்காண ஈரோடு பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்திருந்தனர். ஜல்லிக்கட்டு பேரவையின் தலைவர் ராஜசேகர் உட்பட பலரும் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். ஈரோடு மாவட்டத்தில் மிகச்சிறப்பாக இரண்டாவது ஆண்டாக இந்த ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு நடைபெற்று முடிந்துள்ளது.

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

முதியவரால் பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்; தர்மடி கொடுத்து கடைசி நேரத்தில் காப்பாற்றிய மக்கள்

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
old man misbehaves with a mentally challenged woman

ஈரோடு பழைய பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (67). இவர் கிடைக்கும் வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குடும்பத்துடன் தங்கி உள்ளார். நேற்று இரவு ஆறுமுகம் மது போதையில் அந்த பகுதி வழியாக சென்றபோது மனநலம் பாதிக்கப்பட்ட பெண் அங்கு சென்று இருந்தார். அவரை அருகில் உள்ள முட்புதரில் தூக்கி சென்று வாயில் துணியை வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார். 

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது ஆறுமுகம் அந்த பெண்ணை வன்கொடுமை செய்ய முயன்றதை கண்டு அதிர்ச்சி  அடைந்தனர். உடனடியாக ஆத்திரத்தில் அப்பகுதி மக்கள் ஆறுமுகத்துக்கு தர்ம அடி கொடுத்தனர்.  பின்னர் இது குறித்து சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. 

போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ஆறுமுகத்தை விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பாதிக்கப்பட்ட அந்தப் பெண் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

“என்னை கொலை செய்ய முயற்சிக்கிறார்” - கணவர் மீது மனைவி பரபரப்பு புகார்

Published on 26/06/2024 | Edited on 26/06/2024
Woman complains that her husband is trying to incident her

ஈரோடு இடையன் காட்டுவலசு பகுதியை சேர்ந்தவர் சுகந்தி. இவரது கணவர் சந்திரசேகர். பிசினஸ் செய்து வருகிறார். இந்நிலையில் இன்று(26.6.2024) காலை கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த சுகந்தி திடீரென தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சுகந்தியை தனியாக அழைத்து வந்து விசாரணை நடத்தினர். 

அப்போது அவர், “தனது கணவர் தன்னை கொலை செய்ய முயற்சிக்கிறார். முதலமைச்சர் எனக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்” என கூறினார். இதனை அடுத்து சுகந்தியை போலீசார் விசாரணைக்காக சூரம்பட்டி போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அப்போது சுகந்தி கூறும் போது, “கடந்த அக்டோபர் மாதம் தனது மகன் தற்கொலை செய்து கொண்டார். இதேபோல் தனது மாமியாரும் தற்கொலை செய்து கொண்டார். தற்போது என்னை எனது கணவர் கொலை செய்ய முயற்சிக்கிறார்” என்றார். 

இது  தொடர்பாக புகார் அளியுங்கள். நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். அதனை ஏற்று அவர் புகார் அளித்தார். கலெக்டர் அலுவலகத்தில் பெண் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.