
கடலூர் சட்டமன்றத் தொகுதியில் உள்ள பிரபல தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம் கடலூர் புனித வளவனார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இந்த முகாமில் 64 தனியார் நிறுவனங்கள் பங்கேற்ற நிலையில் 5 ஆயிரத்து 868 பேர் கலந்து கொண்டனர். இதில் 3451 பேர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அய்யப்பன் எம்.எல்.ஏ தலைமை தாங்கி தேர்வு பெற்ற நபர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி பாராட்டினார்.
வேலை வாய்ப்பு முகாமிற்கான ஏற்பாடுகளை டாக்டர் பிரவீன் அய்யப்பன் செய்து அனைவரையும் வரவேற்றார். முகாம் ஒருங்கிணைப்பாளர்கள் சத்ய சேகர், சுதன் பவர் டெக் பூங்குன்றன், கல்லூரி செயலர் சுவாமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், முத்து கலர் முத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் சுதாகர், மனோகரன், சன்பிரைட் பிரகாஷ், துணைத் தலைவர் சாந்தி, இளைஞர் அணி சதீஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.