
தமிழக பா.ஜ.க செயற்குழு கூட்டம் இன்று காணொளி வாயிலாக தமிழக பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தி.மு.கவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தச் செயற்குழு கூட்டத்தில், தேசியத்திற்கும் தெய்வத்திற்கும் எதிராகச் செயல்படுவதாக தி.மு.கவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கந்த சஷ்டி கவசத்தை கறுப்பர் கூட்டம் இழிவுபடுத்தியதை தி.மு.க.வும், காங்கிரசும் கண்டுகொள்ளவில்லை. இந்து வழிபாட்டின் மீது களங்கம் கற்பித்து தி.மு.க.வும், காங்கிரசும் ஒருசேரச் செயல்பட்டு வருகிறது. ஓ.பி.சி இட ஒதுக்கீடு விவகாரத்தில் தி.மு.க கூட்டணி கட்சிகள் பொய் பரப்பி வருகிறது என பா.ஜ.க செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஓ.பி.சி இட ஒதுக்கீடு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை தமிழக பா.ஜ.க வரவேற்கிறது. கரோனா முன்களப் பணியாளர்களின் தன்னலமற்ற அற்பணிப்பு சேவையைப் பாராட்டியும் பா.ஜ.க தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.