Skip to main content

திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்தது! பொதுமக்கள் மகிழ்ச்சி!!

Published on 29/08/2019 | Edited on 29/08/2019

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் வெள்ளப்பூண்டு. பழனி பஞ்சாமிர்தத்தை தொடர்ந்து திண்டுக்கல் திண்டுக்கல் பூட்டுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கி அங்கீகரித்துள்ளது அதைக்கண்டு பூட்டு உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் பொதுமக்ககள் என அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
       
மத்திய அரசு கடந்த 1999- ஆம் ஆண்டு பல வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவு மற்றும் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வந்தது. புவிசார் குறியீடு வழங்கப்பட்டதன் மூலம் போலி பொருட்கள் தடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு குறிப்பிட்ட இடத்தையோ அல்லது தோற்றத்தையோ குறிப்பிடும் பொருளின் மீது பயன்படுத்தும் பெயர் அல்லது சின்னம் புவிசார் குறியீடு எனப்படுகிறது. இக்குறியீடு அந்தப் பொருளின் சொந்த இடத்தையும் நன்மதிப்பையும் பறைசாற்றும் சின்னமாக விளங்கும்.

Dindigul lock got geographic code, peoples, shop owners happy

 

இந்தியாவில் பாரம்பரியம் மிக்க பொருட்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் அளித்து பாதுகாக்கிறது இச்சட்டம் 1999 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 2003ம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது. தேசிய அளவில் இதுவரை 200- க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு புவிசார் குறியீடு கொடுக்கப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் 25- க்கும் மேற்பட்ட பொருட்களும் அடங்கும். 
 

சமீபத்தில் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானலில் விளையும் வெள்ளைபூண்டு மற்றும் பழனி முருகன் கோவில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம் ஆகியவற்றுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. இதையடுத்து பிரபலமான திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு தற்போது கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் பூட்டு என்றதும் முதலில் நமக்கு ஞாபகத்துக்கு வருவது திண்டுக்கல் மாவட்டம். 
 

திண்டுக்கல் பகுதியில் உள்ள நல்லாம்பட்டி, பப்பன்பட்டி, பாரப்பட்டி புதூர் அனுமந்த நகர் உள்பட பல பகுதிகளிலும் திண்டுக்கல் பூட்டு தயாரிப்பது ஒரு குடிசை தொழிலாகவே இருந்து வருகிறது. விவசாயம் இல்லாத போது, அதற்கு மாற்று தொழிலாக உருவெடுத்தது தான் பூட்டுத்தொழில். இதில் நேரம் காலம் பார்க்காமல் மக்கள் இத்தொழிலில் ஈடுபட்டனர.  நவீன உலகத்தில் எந்திரங்களின் உதவியோடு தொழிற்சாலைகளில் பூட்டு தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் இருந்தாலும் கூட பூட்டு தயாரிக்கும் தொழிலை குடிசைத்தொழில் போல பல இடங்களில் செய்து வருகின்றனர்.
 

பூட்டுத் தயாரிப்பில் அதிக அளவாக 6 முதல் 8 வரை நம்பு கொள்கையுடையதாக இருக்கும். ஆனால் மாங்காய் பூட்டுகள் சற்று வித்தியாசமாக இருக்கும். மாங்காய் பூட்டின் பக்கவாட்டில் ஒரு பட்டன் இருக்கும். அதை அழுத்தினால் தான் திறக்க முடியும். மாங்காய் பூட்டு அளவுக்கான சதுர பூட்டு, அலமாரி பூட்டு, இழுப்பான் பூட்டு என்று பல வகையான பூட்டுக்கள் தயாரிக்கப்படுகின்றன.

geographic code


 

தனியொரு நபரால் தொடங்கப்பட்ட கூட்டுத்தொழில் நாளடைவில் மிகப் பிரபலமாகி, தற்போது பெரிய தொழிற்சாலையாக மாறியதாக கூறப்படுகிறது. பல்வேறு ரக பூட்டுகளை தயாரித்த நிலையில் பழைய திருடர்களும் உடைக்க முடியாத வலிமையான பூட்டு என்பதால் திண்டுக்கல் பூட்டு உலக அளவில் பிரசித்தி பெற்றது.


அதோடு லிவர் பூட்டு, கொத்து பூட்டு, மாங்காய் பூட்டு, நான்கு சாவி உள்ள பார்ட்னர்ஷிப் பூட்டு ஒரு சாவியால் பூட்டிய பிறகு மற்றொரு சாதியை கொண்டு திறந்து மூடினால் மீண்டும் பழைய சாவி மூலம் திறக்க முடியாத மாஸ்டர் கீ போர்டு வேறு சாவியை பயன்படுத்தினால் வெளியே எடுக்க முடியாதவாறு எடுக்க முடியாதவாறு பிடித்துக்கொள்ளும் சாவி பிடிக்கும் போட்டு வெல் போட்டு டயலாக் கோயில் போட்டு என 24 வகையான பூட்டுகளை உருவாக்கி பிரமிக்க வைக்கின்றன கூட்டு உற்பத்தியாளர்கள்.

இது சம்பந்தமாக திண்டுக்கல்லில் பிரபலமான டி.என்.மாணிக்கம் பூட்டுக்கடையின் உரிமையாளர் பாலாஜியிடம் கேட்டபோது, திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்ததைக் கண்டு என்னை போல் உள்ள பல வியாபாரிகள் பெருமை அடைந்து இருக்கிறோம். திண்டுக்கல் மாநகர மக்களை காட்டிலும்  வெளியூர் மக்கள் தான் திண்டுக்கல் பூட்டை ஆர்வமாக வாங்கி செல்கிறார்கள். அதிலும் ஆன்லைன் மூலம் ஆடர்கள் அதிகமாக வருவதாக தெரிவித்தார்.

மேலும் திண்டுக்கல் பூட்டை தயார் செய்து சென்னை, சிவகாசி, திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உள்பட சில பகுதிகளுக்கும் பாண்டிச்சேரிக்கு அனுப்பி வைக்கிறோம். மற்ற பூட்டுக்களை விட திண்டுக்கல் பூட்டு தரமாகவும், உறுதியாகவும் இருப்பதால் மக்கள் விரும்பி வாங்கி வருகிறார்கள். அதுபோல் இரும்பு போட்டு 150 ரூபாயும், 2ஜி 500 ரூபாயும், 3 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் இப்படி பலவகைகளில் திண்டுக்கல் பூட்டு விற்பனை செய்து வருகிறோம்.
 

geographic code




அதுபோல் உள் பூட்டு 400 முதல் 8000 வரை விற்பனை செய்து வருகிறோம். அதைத்தான் தற்போது மக்கள் ஆர்வமாக வாங்கி வருகிறார்கள். ஆனால் சமீப காலமாகவே திண்டுக்கல் பூட்டு உற்பத்தி குறைந்து வருகிறது. இந்த பூட்டு உற்பத்தியை வலுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வந்து பூட்டு உற்பத்தி செய்யும் தொழிலாளர்களுக்கு கடன் உதவிகளும் செய்து ஊக்கப்படுத்தினால் மீண்டும் திண்டுக்கல் பூட்டு உலக உலக அளவில் பேசப்படும் என்று கூறினார்.
 

திண்டுக்கல் பூட்டு தொழில் உச்சத்தில் இருந்தபோது பூட்டு தொழிலாளர்கள் கூட்டுறவு சங்கம் என்ற அமைப்பை உருவாக்கிய அன்றைய அரசு, அரசாங்க அலுவலகங்களுக்கு இங்கு மட்டுமே பூட்டு கொள்முதல் செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. 


இந்த பூட்டு உற்பத்தி மெல்ல மெல்ல நசுங்கி போனது. உற்பத்தி குறைந்ததால் பூட்டியுள்ள வீடாக தொழிலாளர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் தான் தற்பொழுது திண்டுக்கல் பூட்டுக்கு புவிசார் குறியீடு கிடைத்திருப்பது மூலம் பூட்டுத்தொழில் மேலும் வளர்ச்சியடையும் என்று உற்பத்தியாளர்கள் பலரும் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து திண்டுக்கல் பூட்டுக்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்ததன் மூலம் மீண்டும் திண்டுக்கல் பூட்டு வளர்ச்சி பாதைக்கு செல்ல இருக்கிறது.


 

சார்ந்த செய்திகள்