Skip to main content

அதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

Published on 19/03/2019 | Edited on 19/03/2019

 

ராயப்பேட்டையிலுள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிக்கை இபிஎஸ்,ஓபிஎஸ் தலைமையில் இன்று வெளியிடப்பட்டது.

 

 admk Election Statement Release

 

அந்த அறிக்கையை துணை முதல்வர் ஓபிஎஸ் வாசித்தார்,

 

வறுமை ஒழிப்பு,  அம்மா தேசிய வறுமை ஒழிப்பு திட்டம், மாதாந்திர நேரடி உதவி தொகை ரூபாய் 1500 வழங்கும் திட்டம். வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள், விதவை பெண்கள், மாற்றுத்திறனாளிகள், ஏழை தொழிலாளர்களுக்கு உதவி தொகை வழங்கும் இந்த திட்டத்தை நாடுமுழுவதும் செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம். .

 

இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெற எம்ஜிஆர் பெயரில் திறன் மேம்பாட்டு திட்டம் கொண்டுவரப்படும்.

 

நீர் மேலாண்மை திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்க்கப்படும். பெருமளவு மழை பெய்யும் காலங்களில் நீரை சேமித்து வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்ல திட்டம் செயல்படுத்தப்படும். காவிரி கோதாவரி திட்டங்களை உடனடியாக துவங்க வலியுறுத்துவோம்.

 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பருவமழையின் பொழுது பெரும் நீரை பயன்படுத்த தடுப்பணை, நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் கொண்டுவரப்படும்.

 

விவசாயிகளின் கடன் சுமையை தீர்க்கும் வகையிலான உறுதியான திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசை வலியுறுத்துவோம்.

 

கல்வியை பொதுப்பட்டியலில் இருந்து மாநில பட்டியலுக்கு கொண்டுவர வலியுறுத்துவோம்.

 

 

மருத்துவம் போன்ற உயர் கல்விகளில் சேர நீட் உள்ளிட்ட தேர்வுகளில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற வலியுறுத்துவோம்.

 

தனியார் துறை வேலை வாய்ப்புகளில் இடஒதுக்கீடு நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

 

 உயர் கல்விக்கு பெற்ற கல்விக்கடனை ரத்து செய்ய வலியுறுத்துவோம்.

 

7 பேர் விடுதலை குறித்து ஆளுநருக்கு உத்தரவிடுமாறு குடியரசு தலைவரிடம் அதிமுக தொடர்ந்து வலியுறுத்தும்.

 

தமிழை மத்திய அரசின் அலுவல் மொழியாக அறிவிக்க வலியுறுத்துவோம்.

 

பொது சிவில் சட்டத்தை செயல்படுத்தும் எந்த முயற்சியிலும் மத்திய அரசு ஈடுபடக்கூடாது என வலியுறுத்துவோம். 

 

 

சார்ந்த செய்திகள்