Skip to main content

ஆளுங்கட்சி எதிர்க்கட்சிகளுக்கு நிகராக தேர்தல் களத்தில் கலக்கும் சுயேச்சைகள்!

Published on 09/02/2022 | Edited on 09/02/2022

 

dindigul local election

 

திண்டுக்கல் மாநகராட்சி 48 வார்டுகளில் போட்டியிடக் கூடிய ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி வேட்பாளர்கள் மேயர் பதவியை பிடிக்கப் பலவிதங்களில் பலத்தை நிரூபிக்கும் விதமாக புதுப்புது உத்திகளைக் கையாண்டு வாக்காளர்களைக் கவர்ந்து வருகின்றனர்.

 

டீக்கடைகளில் டீ ஆற்றுவது, ஹோட்டல்களில் சப்பாத்தி சுடுவது, மார்க்கெட்டிற்கு சென்று காய்கறி விற்பது இப்படி பல்வேறு விஷயங்களைச் செய்து வாக்காளர்களைக் கவர்ந்து தங்களது வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்களுக்கு நாங்கள் கொஞ்சமும் சளைத்தவர்கள் அல்ல என நிரூபிக்கும் விதமாக சுயேச்சை வேட்பாளர்களும் காலில் சக்கரம் கட்டிக்கொண்டு வாக்குக்களைச் சேகரித்து வருகின்றனர்.

 

dindigul local election

 

இந்நிலையில் திண்டுக்கல் 44வது வார்டு சுயேச்சை வேட்பாளர் மார்த்தாண்டன் மற்றும் 2வது வார்டில் போட்டியிடக் கூடிய சந்தோஷ முத்து இருவரும் தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் தென்னை மரங்களை கையில் ஏந்தியவாறு ஆதரவாளர்களைத் திரட்டிக் கொண்டு வீடு வீடாக, வீதி வீதியாகச் சென்று வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர். சுயேச்சை வேட்பாளர்களுக்கு மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து அப்பகுதி வாக்காளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதேபோல் 17வது வார்டில் களமிறங்கியுள்ள இளம் சுயேட்சை வேட்பாளரான வெங்கடேஷ் குடிநீர் குழாய் ஒதுக்கி இருப்பதால், வாக்கள மக்களைச் சந்தித்து குடிநீர் குழாயைக் காட்டி வாக்கு சேகரித்து வருகிறார். இப்படி மூன்று சுயேச்சை வேட்பாளர்களும் இந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி வேட்பாளர்கள் அரண்டு போகும் அளவுக்குத்  தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள்.  

 

 

சார்ந்த செய்திகள்