Skip to main content

பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.இ.எஸ் ஆர்ப்பாட்டம்

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

SRES struggle at Ponmalai railway workshop

 

இரயில்வே தொழிலாளர்களுக்கான உத்தரவாதம் இல்லாத புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து அனைத்து தொழிலாளர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பதை முக்கிய கோரிக்கையாக மத்திய அரசை வலியுறுத்தி பொன்மலை ரயில்வே பணிமனை ஆர்மரிகேட் வாயில் முன்பாக எஸ்.ஆர். ஈ.எஸ் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

 

இந்த ஆர்ப்பாட்டம் பொன்மலை எஸ்.ஆர். ஈ.எஸ் தொழிற்சங்க பணிமனை கோட்ட தலைவர் எல். பவுல் ரெக்ஸ் தலைமையில், துணைப்பொதுச்செயலாளர் எஸ்.ரகுபதி முன்னிலையில் நிர்வாகிகள் பாலமுருகன், ஆசைதம்பி, ஞானசேகர், கோரி முகமது, சாம்சன், செல்வகுமார், ஜோசப் சேகர்,மதன்குமார், சிதம்பரம், வெங்கட் நாராயணன், சீனிவாசன், சேசுராஜா, ஜார்ஜ் ஸ்டீபன், சுந்தர்ராஜன், சுந்தர் மற்றும் ஏராளமான இரயில்வே தொழிலாளர்கள், ஓய்வுபெற்ற தொழிலாளர்கள் கலந்து கொண்டனர். மேலும், நிலுவையிலுள்ள 18 மாத பஞ்ச படியை உடனடியாக அரியர்ஸாக வழங்கிடவும், பணிமனைகளில் தனியார்மயம் கண்டித்தும் மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஓடும் இரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
young debate woman speaker rail issue

காரைக்காலில் இருந்து கடலூர் வழியாக பெங்களூர் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலில் பட்டிமன்ற இளம் பெண் பேச்சாளரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று காலை காரைக்காலில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விருத்தாசலம் வழியாக பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரெயிலில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த  இளம் பட்டிமன்ற பெண் பேச்சாளர் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ரயில் கடலூர் துறைமுகம்,  குறிஞ்சிப்பாடி நெய்வேலி இடையில் காலை சுமார் 10 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அந்தப் பெண் பயணம் செய்த பெட்டியில் ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது முழு மது போதையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி அந்த இளம் பெண் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

அப்படி அமர்ந்த அவர், அடிக்கடி அந்த இளம் பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததோடு, திடீரென தனது ஆடையை விலக்கி இளம்பெண்ணை பார்த்து ஆபாசமாக, அருவருப்பான வகையில் செய்கை செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அந்த மனிதனை கண்டித்ததோடு அவரது செய்கையை செல்போனில் படம் பிடித்துள்ளார். இளம் பெண் கண்டித்தும் அந்த போதை ஆசாமி, தனது ஆபாச செய்கையை நிறுத்தவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண், அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். ரயில் நெய்வேலி அருகே நிறுத்தப்பட்டது. 

பிறகு அதே ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக பயணம் செய்து கொண்டிருந்த ரயில்வே காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் சம்பவம் நடந்த பெட்டிக்கு விரைந்து சென்றார். அவரிடம் அந்த இளம் போதை ஆசாமி குறித்து புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அந்த நபரை கைது செய்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story

தமிழகத்தில் தொடரும் போராட்டம்; ‘அமரன்’ படத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
Tamil Nadu staged a road blockade to ban the movie Amaran

கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது. தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பலரின் கவனத்தை பெற்றது. அதே சமயம், படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்துள்ளதாக கூறி எதிர்ப்பும் கிளம்பி வருகிறது. 

இந்த நிலையில், தேசிய ஒற்றுமைக்காக போராடுகின்ற இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளதாக கூறி அமரன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என தமிழக முழுவதும் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பாக திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே சாலை மறியல் போராட்டம் மாவட்ட செயலாளர் ராயல் சித்திக் தலைமையில் நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் கலீல் ரகுமான், மாவட்ட துணைச் செயலாளர் முகமது தாஹா, அபூபக்கர் சித்திக், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ஷேக்கான், பேரவை மாவட்ட செயலாளர் பீர், மலைக்கோட்டை பகுதி செயலாளர் இப்ராஹிம் ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 32 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.